மூர்க்கமாக நடக்கும் மாணவர்களை.. ஆசிரியர்களுக்கு அமைச்சர் அன்பில் அதிரடி உத்தரவு..!
சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்ற
நிகழ்ச்சியில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கலந்து
கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது: “கொரோனா தொற்று மீண்டும்
பரவுகிறது. முதல்வர் அலுவலகத்தில் மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை மேற்கொண்ட
பிறகு சொல்லும் வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக் கல்வித்துறை பின்பற்றும்.பள்ளிகளில்
மூர்க்கமாக செயல்படும் மாணவர்களும் நல்லவர்கள் தான். ‘எந்தக் குழந்தையும்
நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே.. அவன் நல்லவன் ஆவதும், தீயவன்
ஆவதும் அன்னை வளர்ப்பதிலே’ என்ற பாடலை முன்னுதாரணமாகக் கொண்டு,
மாணவர்களுக்கு 2-வது அன்னையாக விளங்கக்கூடிய ஆசிரியர்கள்தான் மாணவர்களை
திருத்த வேண்டும்.
பள்ளிகளில் மாணவர்களுக்கு கவுன்சிலிங் அளிக்க
ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை பாடத்திட்டம்
மாற்றப்படுகிறது. அதன் அடிப்படையில் மாணவர்களின் தேவைக்கேற்ப
பாடத்திட்டத்தில் மாற்றம் செய்யப்படும்” என்றார்.
No comments