Breaking News

கல்விச் செலவினால் பெற்றோர்கள் பாதிக்கப்படும் நிலையை ஒழிக்க தமிழ்நாட்டின் புதிய கல்விக் கொள்கை உதவவேண்டும்.

தமிழ்நாட்டின் புதிய கல்விக் கொள்கையை வடிவமைக்க
டெல்லி உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதியரசர் முருகேசன் தலைமையில் 12 உறுப்பினர்களைக் கொண்ட  குழுவை தமிழ்நாடு அரசு அமைத்திருக்கிறது.

கல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பு சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

சாதி, மதம், தொழில், பண வசதி, சொத்து ஆகியவற்றின் அடிப்படையில் மக்கள் பல்வேறு பிரிவினர்களாக வாழ்கிறார்கள்.  இந்தகைய சமூகப் பிரிவினைகள் கல்வியிலும் பிரதிபலிக்கும்  நிலை இன்று உள்ளது. சமூகத்தில் நிலவும் அனைத்து வகையான சமூக  ஏற்றத்தாழ்வுகளையும் பிரிவினைகளையும் ஒழித்து மக்களிடம் சமத்துவத்தையும் உடன்பிறப்புணர்வையும் வளர்க்க புதிய கல்விக் கொள்கை உதவவேண்டும்.

கல்விக் கூடங்களை ஜனநாயகத்தின் விளைநிலங்களாக மாற்ற அருகமைப்பள்ளி அமைப்பிலான பொதுப்பள்ளி முறையை உருவாக்கவேண்டும். பள்ளி முன்பருவக் கல்வியிலிருந்து பள்ளி இறுதி வகுப்பு வரை தரமான, சமமான, கட்டாய இலவசக் கல்வி அவரவர் தாய்மொழியில் அருகமைப் பள்ளியில் கிடைப்பதை உறுதிப் படுத்த வேண்டும்.

படித்த படிப்புக்கேற்ற வேலையும் ஊதியமும் அனைவருக்கும் உறுதி செய்யப்படவேண்டும்.

கல்விச் செலவினால் பெரும்பாலான பெற்றோர்கள் கடன்சுமைக்கு ஆளாகும் நிலை உள்ளது. இது போன்ற அவலங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

மேற்கூறிய மாற்றங்கள் புதிய கல்விக் கொள்கை மூலம் உருவாகவேண்டும்.
 
சு. மூர்த்தி, ஒருங்கிணைப்பாளர், கல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பு.
 
99651 28135, kmktamilnadu@gmail.com

No comments