Breaking News

TNPSC: டின்பிஎஸ்சி Group 4 பிரிவில் என்னென்ன பணி வாய்ப்புகள் உள்ளன? ஊதியம் எவ்வளவு:


 

தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையத்தின் கீழ் தமிழ்நாடு அரசுப் பணிகள் பெரும்பாலானவற்றுக்கு தேர்வுகள் நடத்தப்படுகின்றன. குரூப் -1, குரூப் -2, குரூப் -4 என்ற பிரிவின் கீழ் நடத்தப்படும் தேர்வுகளில் பல லட்சம் போட்டி தேர்வுகள் விண்ணப்பிப்பதில் இருந்தே அரசு பணிகளுக்கு இளைஞர்களிடையே இருக்கும் மோகம் குறித்து நாம் அறிந்துகொள்ள முடியும்.

5,831 காலி பணியிடங்களை கொண்ட குரூப் 2 தேர்வு மே மாதம் 21ம் நடைபெறவுள்ளது.  இதற்கு டிகிரி படிப்பு முக்கியம் என்பதால் 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு படித்தவர்களின் குறிக்கோளாக குரூப் 4 தேர்வு உள்ளது. இதற்கான தகுதி 10ம் வகுப்பு மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. குரூப் 4 தேர்வு தொடர்பான காலி பணியிடங்கள், தேர்வு தேதி ஆகியவை நாளை அறிவிக்கப்படவுள்ளது.

குரூப் 4 பணியிடங்கள்:

முன்பு குரூப் 4 பணியிடங்களுக்கும் வி.ஏ.ஓ. எனப்படும் கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களுக்கும் தனித் தனியாக தேர்வுகள் நடத்தப்பட்டு வந்தன. பின்னர் இவற்றை ஒருங்கிணைத்து ஒருங்கிணைந்த சிவிஸ் சர்விசஸ் தேர்வு - 4 (Group 4) தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஒ), டைபிஸ்ட், ஸ்டேனோ டைபிஸ்ட்,  இளநிலை உதவியாளர், பில் கலெக்டர், நில அளவையாளர் ஆகிய பணியிடங்கள் குரூப் 4 தேர்வு மூலம் நிரப்பப்படுகின்றன.

கடைசியாக கடந்த 2019ம் ஆண்டில் 9 ஆயிரத்து சொச்சம் பதவிகளுக்கு குரூப் 4 தேர்வு நடைபெற்றது. கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகள் தேர்வு நடைபெறவில்லை.  நாளை தேர்வு அறிவிப்பு வெளியாகவுள்ள நிலையில், இம்முறையும் காலி பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படும் என்பது தேர்வர்களின் எண்ணமாக உள்ளது.

ஊதியம்:

ஸ்டெனோ டைபிஸ்ட் பணியிடத்துக்கு 20,600-65,500 என்ற ஊதிய முறையும் பிற பணியிடங்களுக்கு 19,500-62,000 என்ற ஊதிய முறையும் கடந்த 2019 ஆண்டு வெளியிடப்பட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது


No comments