பால.ரமேஷ். தினம் ஒரு குட்டிக்கதை . தவளைகள் கூட்டமொன்று காட்டுவழி பயனித்துக் கொண்டிருந்தது.....
பால.ரமேஷ்.
தினம் ஒரு குட்டிக்கதை .
தவளைகள் கூட்டமொன்று காட்டுவழி பயனித்துக் கொண்டிருந்தது.....
மிகுந்து அடர்ந்த காடு என்பதால் எல்லா தவளைகளும் கவனமாகவே பயனம் செய்து கொண்டிருந்தது..
திடீரென அப்போது அக்கூட்டத்தில் இரண்டு தவளைகள் மட்டும் அக்காட்டில் இருந்த பாதாள குழியில் தவறி விழுந்துவிட்டன..
செய்வதறியாது திகைத்து குழியின் பாதி வழியில் சிக்கி தவித்து நின்று கொண்டிருந்தது அந்த தவளைகள்.
தங்கள் கூட்டாளிகள் காப்பாற்றுவார்கள் என்று எண்ணுகயில்.. குழியின் மேல் சுற்றி நின்ற கூட்டாளிகள் குழியின் ஆழத்தை நன்றாக நோட்டமிட்டது.
அக்குழியோ படுபயங்கர ஆழமாக இருந்ததால் அவைகளும் பயந்துவிட்டன...
உள்ளே விழுந்த தவளைகள் வேகமாக தவ்வி மேல வர முயற்சித்து கொண்டிருந்தது...
மேல இருந்த தவளைகளோ.. சூழ்நிலையை பார்த்துவிட்டு இரு தவளைகளும் பிழைக்க வழியில்லை என்று முடிவு செய்தது. அதோடு நிற்காமல் அதை வார்த்தைகளாக சத்தமாக சொல்லி கதற ஆரம்பித்துவிட்டது..
இதனை கேட்டுகொண்டு செய்வதறியாது திகைத்த தவளைகளில் ஒன்று தவறி ஆழத்திற்குள் விழுந்து இறந்தே போனது..
ஆனால் மேலே இருந்த தவளைகள் தப்பிப் பிழைக்க வழி இல்லை என்று கூறிக் கொண்டிருப்பதை கேட்டுக் கொண்டேயும் தீராத முயற்சியால் ஒரு தவளை மட்டும் சட்டென மேலே வந்தது...
அதிர்ச்சியாய் பார்த்துக் கொண்டிருந்த மற்ற தவளைகள்... 'எவ்வாறு நீ தப்பினாய்???' என கேட்க..
தப்பிய தவளையோ... 'எனக்கு இரண்டு காதுகளும் கேட்காது.. நீங்கள் அனைவரும் என்னை தப்பித்து மேலே வருமாறு உற்சாகப்படுத்தியதால் மட்டுமே நான் பிழைத்தேன்... ஆதலால் அனைவருக்கும் நன்றி' என கூறிவிட்டு தன் பயனத்தை தொடர்ந்தது.
நீதி: சில நேரங்களில் மற்றவரின் பேச்சை கேட்காமல் நம் முயற்சியை மட்டும் நம்புவதே நலம்!
No comments