+2 அல்லது டிகிரி போதும்.. லட்சத்தில் சம்பளம்.. சென்னையில் நவ 4, 5ல் இண்டர்வியூ.. அழைக்கும் HCL
கலை மற்றும் அறிவியல் பிரிவில் டிகிரி முடித்து அனுபவம் இல்லாதவர்களுக்கும் புதிய டிகிரி முடித்து முன் அனுபவம் இல்லாதவர்களுக்காகவும் எச்சிஎல் ஐடி நிறுவனம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்த பணிக்கான இண்டர்வியூ நவம்பர் 4 - 5ம் தேதிகளில் சென்னையில் நடைபெற உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பம் செய்து இண்டர்வியூவில் பங்கேற்கலாம். தேர்வாகும் நபர்கள் சென்னையில் நியமனம் செய்யப்படுவதோடு அதிகபட்சமாக ரூ.2.6 லட்சம் வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.
முன்னணி ஐடி நிறுவனமான எச்சிஎல் சென்னையில் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் சார்பில் புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:
தற்போதைய அறிவிப்பின்படி எச்சிஎல் நிறுவனத்தில் இன்டர்நேஷனல் வாய்ஸ் ப்ராசஸ் (International Voice Processfor Banking Sector - Freshers)பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இது கஸ்டமர் சப்போர்ட் ரோலாகும்.
இந்த பணிக்கு 12ம் வகுப்பு அல்லது கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஏதேனும் ஒரு பிரிவில் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பம் செய்லாம். அதன்படி பிகாம், பிஎஸ்சி உள்பட பிற பிரிவில் டிகிரி முடித்தவர்களும் விண்ணப்பம் செய்யலாம். இன்ஜினியரிங் படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்ய வேண்டாம்.
அதேபோல் விண்ணப்பதாரர்களுக்கு நல்ல கம்யூனிகேஷன் ஸ்கில்ஸ் இருக்க வேண்டும். ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். மல்டி டாஸ்க் செய்ய தெரிந்திருக்க வேண்டும். பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு குறைந்தபட்சமாக ஆண்டுக்கு ரூ.2.5 லட்சம் சம்பளம் வழங்கப்பட உள்ளது. அதிகபட்சமாக ஆண்டுக்கு ரூ.2.6 லட்சம் வரை சம்பளம் கிடைக்கும்.
அதோடு பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே பணி நாட்களாகும். தேர்வாகும் நபர்கள் சென்னை அலுவலகத்தில் நியமனம் செய்யப்படுவார்கள்.அதோடு அவர்கள் அலுவலகத்தில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவுக்குள் இருக்க வேண்டும். Cab வசதி செய்து தரப்படும். அலுவலகம் சார்பில் வீட்டுக்கே வாகனம்வந்து பணிக்கு அழைத்து சென்று மீண்டும் வீட்டில் டிராப் செய்யும் வசதி உள்ளது.
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் எச்சிஎல் நிறுவனத்தின் இணையதளம் மூலம் விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பத்துக்கான கடைசி தேதி எதுவும் குறிப்பிடப்படவில்லை. இதனால் முன்கூட்டியே ரிஜிஸ்டர் செய்ய வேண்டும். அதன்பிறகு நவம்பர் 4 - 5ம் தேதிகளில் சென்னை நாவலூரில் நடக்கும் இண்டர்வியூவில் பங்கேற்கலாம்.
இண்டர்வியூ என்பது HCL - ETA 1- Village and Panchayat, ETA- Techno Park, Special Economic Zone 33 Rajiv Gandhi Salai, Navallur, Taluk, Chengalpattu, Tamil Nadu 603103 என்ற முகவரியில் நடைபெற உள்ளது. இண்டர்வியூ செல்லும்போது Resume, ஆதார் கார்டு அல்லது வேறு ஏதாவது ஒரு ஐடி கார்டு வைத்திருப்பது நல்லது. அதோடு கல்வி சான்றிதழ்களையும் கொண்டு செல்வது அவசியமாகும்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
No comments