7% வட்டியில் ரூ.20 லட்சம் வரை கடன் தருகிறது தமிழக அரசு... எப்படி விண்ணப்பிப்பது? முழு விபரம்!
தமிழக அரசு தொழில்முனைவோருக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக சிறு மற்றும் குறு தொழில் முனைவோருக்கு நிதிச்சுமை மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது.
பல சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்கள் நிதிச்சுமையை தாங்க முடியாமல் தவிக்கின்றன. இந்நிலையில், தமிழக அரசு சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு உதவும் வகையில் சிறப்பான கடன் உதவி திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. அதன்படி, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர் தொழில் வளர்ச்சிக்காக "கலைஞர் கடனுதவி " திட்டத்தின் கீழ் 20 லட்சம் வரை வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு கூட்டுறவு வங்கியின் கீழ் செயல்படும் அனைத்து தாய்கோ வங்கிக் கிளைகளிலும் இந்தக் கடன் தொகையைப் பெறலாம். அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறையின் கீழ் தமிழ்நாடு தொழில்துறை கூட்டுறவு வங்கி செயல்பட்டு வருகிறது. சிறு, குறு மற்றும் உற்பத்தி நிறுவனங்கள் இத்திட்டத்தின் கீழ் 7 சதவீத வட்டி விகிதத்தில் ரூ.20 லட்சம் வரை கடன் பெறலாம். இத்திட்டத்தில் அசையா சொத்துக்களை அடமானமாக வைக்க வேண்டும்.
விண்ணப்பதாரர் 18 வயது முதல் 65 வயதுக்குள் இருக்க வேண்டும். தொழில் முனைவோர் CIBIL மதிப்பெண் 600 புள்ளிகளைப் பெற்றிருக்க வேண்டும். அதற்கும் குறைவாக சிபில் மதிப்பெண் பெற்றவர்களுக்கு கடன் கிடைக்க வாய்ப்பில்லை. மேலும் கடனாளிகள் முந்தைய 2 நிதியாண்டுகளில் லாபகரமாக செயல்பட்டிருக்க வேண்டும். இத்திட்டத்திற்காக நடப்பு நிதியாண்டில் தமிழக அரசு ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments