Breaking News

8வது ஊதியக்குழுவில் 92% ஊதிய உயர்வு: மத்திய அரசு ஊழியர்களுக்கு பட்ஜெட் 2025 -இல் நல்ல செய்தி

 


சமீபத்தில் மத்திய அரசு, ஜூலை மாதத்துக்கான அகவிலைப்படியை 3% அதிகரித்து மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு மகிழ்ச்சியை அளித்தது. அடுத்ததாக, 8வது ஊதியக்குழு பற்றிய அறிவிப்புக்காக ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் ஆவலோடு காத்திருக்கிறார்கள். 

இது குறித்து அரசாங்கம் இன்னும் அதிகாரப்பூர்வமாக எந்த தகவலையும் அளிக்கவில்லை. எனினும், பல தரப்புகளிடமிருந்து இது குறித்த சில முக்கிய அப்டேட்கள் வந்த வண்ணம் உள்ளன. இவற்றை தொடர்ந்து கூடிய விரைவில் அடுத்த ஊதியக்குழு பற்றிய அறிவிப்பை அரசாங்கம் வெளியிடும் என கூறப்படுகின்றது.  

பொதுவாக 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதிய ஊதியக்குழுக்கள் அமைக்கப்படுகின்றன. 7வது ஊதியக்குழு 2014 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டு 2016 ஆம் ஆண்டு அமலுக்கு வந்தது. அந்த வகையில், 8வது உதியக்குழு 2026 ஆம் ஆண்டு அமலுக்கு வர வேண்டும். 

அப்போதைய பொருளாதார காரணிகள், பணவீக்கம், அரசின் பொருளாதார நிலை ஆகியவற்றை கணக்கில் கொண்டு ஊயர்களின் சம்பளத்திலும், ஊதிய அமைப்பிலும் மாற்றங்களை செய்ய்ய ஊதியக்குழுக்கள் அமைக்கப்பட்டு, அந்த குழுவின் பரிந்துரைகளில் அடிப்படையில், மாற்றங்கள் செய்யப்படுகின்றன.

8வது ஊதியக் குழு, அடுத்த ஆண்டு தொடக்கத்தில், 2025 யூனியன் பட்ஜெட்டின் போது அறிவிக்கப்படலாம் என கூறப்படுகின்றது. பட்ஜெட் இந்த அறிவிப்புக்கான சரியான நேரமாக இருக்கும் என ஒரு தொழிற்சங்கத் தலைவர் குறிப்பிட்டார்.

மத்திய அரசு ஊழியர்களின் அடிப்படை ஊதியத்தை கணக்கிட பயன்படுத்தப்படும் ஃபிட்மெண்ட் ஃபாக்டரை அடுத்த ஊதியக்குழுவின் அரசு மாற்றும் என நம்பப்படுகின்றது. கடந்த 7வது ஊதியக்குழுவிலேயே இதை 3.68 ஆக மாற்ற  வேண்டும் என கோரிக்கை இருந்தது. ஆனால், அரசாங்க அதை 2.67 ஆகவே வைத்தது.  

7வது ஊதியக்குழுவில் ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 2.57 ஆனதைத் தொடர்ந்து மத்திய அரசு ஊழியர்களுக்கான குறைந்தபட்ச அடிப்படை ஊதியம் மாதம் ஒன்றுக்கு ரூ.7,000 -இலிருந்து ரூ.18,000 ஆக உயர்ந்தது. ஓய்வு பெற்றவர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.3,500 -இல் இருந்து ரூ.9,000 ஆக உயர்ந்தது. 

மத்திய அரசு ஊழியர்கள் மட்டுமின்றி ஓய்வூதியதாரர்களின்(Pensioners) ஓய்வூதியத்திலும் நல்ல ஏற்றம் இருக்கும். ஓய்வு பெற்றவர்களின் குறைந்தபட்ச ஓய்வூதியம் தற்போது ரூ.9,000 ஆக உள்ளது. இது ரூ.17,280 ஆக உயரக்கூடும். பணவீக்கம், விலைவாசி மற்றும் பிற பொருளாதார காரணிகளால் பாதிக்கப்பட்டுள்ள மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு இது மிகப்பெரிய நிவாரணத்தை அளிக்கும்.  

இந்த மாதம், மத்திய ஊழியர்களின் பணி நிலைமைகள் குறித்து ஆலோசிக்க உருவாக்கப்பட்ட JCM எனப்படும் கூட்டு ஆலோசனை அமைப்பின் (Joint Consultative Machinery) கூட்டம் நடைபெறும். இதில் 8வது ஊதியக்குழு குறித்த சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மன்றம் அரசு மற்றும் ஊழியர்களுக்கு இடையே உள்ள பிரச்சனைகளை தீர்க்க உதவுகிறது. JCM தேசிய கவுன்சில் மத்திய அமைச்சரவை செயலாளரால் வழிநடத்தப்படுகிறது. அங்கீகரிக்கப்பட்ட ஊழியர் சங்கங்கள் மற்றும் சேவை சங்கங்களின் பிரதிநிதிகள் இதில் உறுப்பினர்களாக உள்ளனர். ளை உள்ளடக்கியது.

No comments