Breaking News

மொபைல் போனுக்கு எப்போது சார்ஜ் போடனும்? நிறைய பேருக்கு தெரியாத விஷயம்.. சூப்பர் டிப்ஸ்!!

 

செல்போன்களை சார்ஜ் செய்வதற்கு என விதிகள் உள்ளன. அதை பின்பற்றுவதே பாதுகாப்பானதாக இருக்கும்.

மொபைல் இல்லாத கரங்களே இன்று கிடையாது. ஸ்மார்ட்போன்கள் இப்போது பலுகி பெருகிவிட்டன. பல வேலைகளை ஒரு சில நிமிடங்களில் மொபைலில் செய்து முடித்துவிடலாம். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் மொபைலை பயன்படுத்துவதோடு மட்டுமின்றி பராமரிக்கவும் தெரியவேண்டும்.

இன்றைய இளசுகள் நாள் முழுக்க கேம் விளையாடுவது, படம் பார்ப்பது என ஸ்மார்ட்போன்களை இடைவிடாது பயன்படுத்துகின்றனர். பெரியோரும் யூடியூப், இன்ஸ்டாகிராம் பார்க்கின்றனர். இதனால் அடிக்கடி சார்ஜும் செய்து கொள்கின்றனர். அதை குறித்து சில விஷயங்களைப் தெரிந்து கொள்வது மிகவும் அவசியம்.

ஸ்மார்ட்போன்களை சரியாக பயன்படுத்தினால் அவற்றை 2 ஆண்டுகள் வரை பயன்படுத்த முடியும். அப்படி முறையாக பயன்படுத்தாவிட்டால் வெறும் 6 மாதங்களில் பழுதாகிவிடும். போன்களை முறையாம பயன்படுத்தாவிட்டால் அவை அதிக வெப்பமடையும். சில போன்கள் வெடித்து சிதற கூட வாய்ப்புள்ளது. இந்த விபரீதங்களை தடுக்க கவனமாக இருக்கவேண்டும். அதிலும் பேட்டரியை பயன்படுத்தும்போது இந்த டிப்ஸை பின்பற்றுங்கள்.

செல்போன் நன்றாக இயங்க பேட்டரியும் அவசியம். அது இல்லாமல் போன் 'ஆன்' செய்யவே முடியாது. ஒரு மொபைலை வாங்கும்போதே பேட்டரி குறித்து கவனிக்க வேண்டும். பேட்டரியின் தரம், சார்ஜிங் வசதி ஆகியவை தெரிந்து வாங்குவது கட்டாயம். போனில் சார்ஜ் செய்யும் போது எதை கவனிக்க வேண்டும் என இங்கு காணலாம்.

சார்ஜ் செய்யும் போது பார்க்கவேண்டியது

ஸ்மார்ட்போனில் பேட்டரியை எவ்வளவு சதவீதம் சார்ஜ் செய்ய வேண்டும் என்பது குறித்து பெரும்பாலானோருக்கு தெரிவதில்லை. இதை தெரிந்து கொண்டாலே பாதி பிரச்சனை தீர்ந்துவிடும். பலரும் மொபைல் போன் 100 சதவீதம் வரை சார்ஜ் செய்யப்பட வேண்டும் என நினைக்கிறார்கள். அதனால் அடிக்கடி சார்ஜ் போட்டுக் கொண்டே இருப்பார்கள். சிலர் கடைசி 1% வரும் வரைக்கும் போனை பயன்படுத்திவிட்டு தான் சார்ஜ் செய்வார்கள். இதில் எது சரி? எதை தவிர்க்க வேண்டும் என நிபுணர்களிடம் கேட்டோம்.

அவர்களின் கூற்றுப்படி, சார்ஜ் போடும் முன் செல்போனில் பேட்டரி முழுவதுமாக தீரவேண்டும். ஆனால் எல்லா நேரங்களிலும் இப்படி செய்தால் ஸ்மார்ட்போன் பேட்டரி பாதிக்க வாய்ப்புள்ளது. நம்முடைய செல்போன் பேட்டரி நல்ல நிலையில் இருக்க வேண்டுமெனில், 20% சார்ஜ் காட்டும்போது தான் மொபைலை சார்ஜரில் சொருக வேண்டும். இதில் சார்ஜ் 100% ஏறும் வரை காத்திருக்காமல் 80 முதல் 90 சதவீதம் வரை மட்டுமே சார்ஜ் செய்ய வேண்டும். இதுவே நன்று என நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த மாதிரி சார்ஜ் செய்தால் மொபைல் பேட்டரி சீக்கிரம் சேதமடையாது.

இந்த விஷயங்களை பின்பற்றினால் உங்களுடைய பேட்டரி ரொம்ப காலம் வரும். அடிக்கடி மொபைல் போன்களை சார்ஜ் செய்யக் கூடாது. இப்படி மீண்டும் மீண்டும் போனுக்கு சார்ஜ் போட்டால் மொபைல் போன் விரைவில் சேதமாகிவிடும்.

No comments