ஒரு பள்ளியில் 100 மாணவர்கள் இருந்தால் 100 மாணவர்களுக்கு தொகை வழங்கப்படும் 20 மாணவர்கள் இருந்தால் 20 மாணவர்களுக்கு மட்டுமே தொகை ஒதுக்கப்படும் முன்பு ரூ 2800 அனைத்து பள்ளிகளுக்கும் என்றிருந்தது தற்போது மாற்றியமைக்கப்பட்டு உள்ளதால்-Revised fund details
//பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு தலைமையாசிரியர்களுக்கான தெளிவுரைகள்//
🥇 நாளை 20.3.2022 அன்று நடைபெறுவது பள்ளி மேலாண்மைக் குழு சார்ந்த விழிப்புணர்வு கூட்டம் மட்டுமே
🥇நாளை நடைபெறும் பள்ளி மேலாண்மைக் குழு விழிப்புணர்வு கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சித் தலைவர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மாவட்ட கல்வி அலுவலர்கள் உட்பட அனைத்து வகை அலுவலர்களும் வருகை புரிய உள்ளார்கள் என்பதை கவனத்தில் வைத்து கூட்டத்தை மிகச் சரியாக திட்டமிட்டு மாநில திட்ட இயக்குநரின் கடிதத்தின்படி நடத்தவேண்டும்
🥇நடைமுறையில் உள்ள பள்ளி மேலாண்மைக் குழுவிற்கும் நாளைய கூட்டத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை இது மறுகட்டமைப்பு காண விழிப்புணர்வு கூட்டம் மட்டுமே
🥇 நடைபெறும் நிகழ்வுகளை புகைப்படங்கள் காணொளிகளாக பதிவு செய்து வைத்துக் கொள்ள வேண்டும்
🥇பெற்றோர்களின் வருகையை மாநில திட்ட இயக்குநரின் வழிகாட்டுதல்படி பதிவு செய்து நாளை மதியமே tn emis school app (attendance app) upload செய்ய வேண்டும் .
நாளை மட்டுமே அவை இயங்கும் என்பதை கவனத்தில் வைத்துக் கொள்ளவும்
🥇சில தலைமை ஆசிரியர்கள் SMC மறுகட்டமைப்பு அதாவது பள்ளி மேலாண்மைக் குழு 20 உறுப்பினர்களின் தேர்வு நடைபெறுவதாக கூறுகின்றனர் ஆனால் நாளை அதுபோன்ற எந்த நிகழ்வும் இருக்காது நாளை பள்ளி மேலாண்மைக்குழு பற்றியும், 20 உறுப்பினர்கள் தெரிவு செய்யும் முறை பற்றியும், மேலாண்மை குழுவின் பங்களிப்புகள் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009, குழந்தைகளின் உரிமைகள், பள்ளி வளர்ச்சித் திட்டங்கள் பற்றி மட்டுமே இடம்பெற வேண்டும்.
🥇வருகை புரியும் பெற்றோர்களுக்கு தேநீர் ஏற்பாடு செய்வது நன்றாக இருக்கும்
🥇 காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை கூட்டத்தை சிறப்பாக திட்டமிட்டு நடத்த வேண்டும் பெயரளவில் கூட்டம் நடத்துவதைத் தவிர்த்து ஆக்கப்பூர்வமாக அமைவதை உறுதி செய்ய வேண்டும்
🥇 நாளை அனைத்து அலுவலர்களும் இக் கூட்டங்களில் கலந்து கொள்ள இருப்பதால் பள்ளியில் உள்ள ஆசிரியர்கள் எவரும் விடுப்பு எடுக்காமல் வருகை புரிய வேண்டும்
🥇 மாநில திட்ட இயக்குநரின் கடிதத்தை தெளிவாக படித்து அதன் வழிகாட்டுதல்களை முழுவதுமாக பின்பற்ற வேண்டும்.
🥇🥇 **Revised fund details ஐ நன்றாக படிக்கவும்
பள்ளியில் இருக்கும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப மட்டுமே செலவு மேற்கொள்வதற்கு தொகை ஒதுக்கப்பட்டுள்ளது.
அதாவது ஒரு பள்ளியில் 100 மாணவர்கள் இருந்தால் 100 மாணவர்களுக்கு தொகை வழங்கப்படும் 20 மாணவர்கள் இருந்தால் 20 மாணவர்களுக்கு மட்டுமே தொகை ஒதுக்கப்படும் முன்பு ரூ 2800 அனைத்து பள்ளிகளுக்கும் என்றிருந்தது தற்போது மாற்றியமைக்கப்பட்டு உள்ளதால் அனைத்து தலைமையாசிரியர்களும் இவற்றை மனதில் வைத்துக்கொள்ளவேண்டும் மாணவர் எண்ணிக்கை குறைந்தால் தொகையும் குறைவாகத்தான் இருக்கும் என்பதை மீண்டும் ஒருமுறை நீங்கள் தெளிவு படுத்திக்கொள்ள வேண்டும்.
No comments