Breaking News

சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வுடன் பயனர்களுக்கு காத்திருக்கும் மேலும் ஒரு அதிர்ச்சி:

சுங்கச்சாவடிகளில் இன்று  முதல் கட்டண உயர்வு நடைமுறைக்கு வருகிறது. இதனுடன் எலெக்ட்ரானிக் டிக்கெட் இயந்திரம் (E-ATM) மற்றும் POS மற்றும் அங்கீகரிக்கப்படாத பிற அமைப்பு/மென்பொருளை கொண்டு NH கட்டண பிளாசாக்களில் பயனர் கட்டணம் வசூலிக்க கருவியை பயன்படுத்தவும் நாளை முதல் தடை அமலுக்கு வருகிறது.

தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கீழ் உள்ள மாவட்ட சாலைகளின் சுங்கச்சாவடிகளில், நாளை முதல் (ஏப்ரல் 1) புதிய கட்டண உயர்வு அமல்படுத்தப்படும் என  மத்திய அரசு ஏற்கெனவே அறிவித்து இருந்தது. தமிழகத்தில் மொத்தம் உள்ள 28 சுங்கச் சாவடிகளிலும் புதிய கட்டணம் அமலுக்கு வருகிறது.

இத்துடன் எலெக்ட்ரானிக் டிக்கெட் இயந்திரம் (E-ATM) மற்றும் POS மற்றும் அங்கீகரிக்கப்படாத பிற அமைப்பு/மென்பொருளை கொண்டு சுங்கச்சாவடிகளில் பயனர் கட்டணம் வசூலிப்பதற்கான தடையும் நாளை முதல் அமலுக்கு வருகிறது. அதன்படி, FAStag அல்லது பணம் செலுத்தி மட்டுமே சுங்கச்சாவடிகளை வாகன ஓட்டிகள் கடக்க முடியும்.

இது தொடர்பாக கடந்த ஜனவரி மாதம் 1 ஆம் தேதி முதல் சுற்றறிக்கை அனைத்து சுங்கச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்டு இந்த முறையை நடைமுறைப்படுத்த தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் நாளை முதல் முழுவதுமாக இந்த உத்தரவு அமலுக்கு வருகிறது.IHMCL – Indian Highways Management Company Limited இன் கடுமையான கண்காணிப்புக்காக சம்பந்தப்பட்ட PIUS, CO பிரிவு மற்றும் தொழில்நுட்பக் குழுவால் பல்வேறு தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் ஆய்வுகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டன. இந்த வகையில் அனைத்து சுங்கச்சாவடி பாதைகளும் நாளை முதல் "FAStag லேன்கள் ஆஃப் ஃபீஸ் பிளாசா" என அறிவிக்கப்பட்டுள்ளன.சுங்கச்சாவடி  செயல்பாடுகள் மற்றும் ETC அமைப்பின் செயல்பாடு. இத்தகைய ஆய்வு வருகைகளின் போது, மின்னணு டிக்கெட் இயந்திரங்கள் (ETM), விற்பனை முனையம் (POS)  பில்லிங் இயந்திரம் போன்ற கையடக்க சாதனங்கள் சுங்கச்சாவடிகளில்  பயனர் கட்டணம் வசூலிக்க பயன்படுத்துவது கவனிக்கப்பட்டது.இதையடுத்து, இனிமேல் எலெக்ட்ரானிக் டிக்கெட் இயந்திரம் அல்லது கையடக்க பாயின்ட் ஆஃப் சேல் (POS) டெர்மினல், POS பில்லிங் மெஷின் போன்ற எந்தவொரு சாதனங்களையும் பயன்படுத்தி சுங்கச்சாவடிகளில் சுங்கக்கட்டணம் வசூலிக்க தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

No comments