Breaking News

முக்கிய அறிவிப்பு. மாண்புமிகு தமிழ்நாடு கல்வி அமைச்சர் அவர்கள் தலைமையில் நேற்று 17.03.2022- ல் சேலத்தில் நடைபெற்ற மண்டல அளவிளான கூட்டத்தில் எடுத்துரைத்த செய்திகள்:

முக்கிய அறிவிப்பு.

மாண்புமிகு தமிழ்நாடு கல்வி அமைச்சர் அவர்கள் தலைமையில் நேற்று 17.03.2022- ல் சேலத்தில் நடைபெற்ற மண்டல அளவிளான கூட்டத்தில் மதிப்புமிகு கல்வித் துறை ஆணையர் அவர்கள் மதிப்புமிகு தொடக்க கல்வித் துறை இயக்குநர் அவர்கள் மதிப்புமிகு இணை இயக்குநர்  ஆகியோர் பள்ளி பார்வையின்போது கண்ட குறைகளை சுட்டிகாட்டியும் மேற்கொண்டு மதிப்புமிகு முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர், வட்டார கல்வி அலுவலர் ஆகியோர் பள்ளி பார்வை மற்றும் ஆய்வின்போது ஏதேனும் இந்த குறைகளை போக்கவில்லை எனில் ஆசிரியர்கள் மீதும், தங்கள் மீதும் கடுமையான குற்றச்சாட்டிற்கு ஆளாவீர்கள் என எச்சரிக்கப்பட்டார்கள்.

 👉 L.O. என்பது கற்றல் நிகழ்வுகள் பயன்படுத்தி பாடக்குறிப்பேடு இல்லை.

👉2 வரி, 4 வரி கடனுக்கு எழுதியுள்ளார்கள். சரியாக திருத்தப்படவில்லை. சரிபார்க்காமல் கையொப்பம் இட்டுள்ளனர்.

👉 பயிற்சி ஏட்டில் தினமும் கையொப்பம் இல்லை மாணவர்களும் எழுதவில்லை. ஆசிரியர்கள் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும்.

👉 ஆசிரியர்கள் பாடம் நடத்த முன்கூட்டியே தயாரிப்பு செய்து கற்பித்தல் உபகரணங்கள் பயன்படுத்தவில்லை.

👉 பாட குறிப்பு ஒவ்வொரு வாரமும் முறையாக எழுதி அதற்கு கற்றல் விளைவுகள் (LO) பயிற்சியை பயன்படுத்தவில்லை.

👉 ஆசிரியர் வருகை மற்றும் மாணவர் வருகை பதிவு ஒரு சில த. ஆ உரிய நேரத்தில் முடிப்பதில்லை.

👉 கட்டுரை பயிற்சியை முறையாக  ஒரு சில ஆசிரியர்கள் திருத்துவதில்லை.

 👉ஆசிரியர்கள் பாடம் கற்பிக்கும்போது த.ஆ வகுப்பாசிரியர் கற்பித்தல் நிகழ்வு பதிவேடு பேணப்பட வேண்டும்.

👉20.03.2022- ல் SMC  கூட்டம் நடத்தப்பட வேண்டும் போன்ற பல செய்திகள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. மீண்டும் மண்டல ஆய்வு கூட்டம் உடனே நடத்தப்பட உள்ளது. அப்போது இதுபோன்ற குறைகள் கண்டறியப்பட்டால் கடுமையான நடவடிக்கை என கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

👉 LO புத்தகம் ஒவ்வொரு ஆசிரியர் Table மீது கட்டாயம் இருக்க வேண்டும்.

👉பாட குறிப்பேடு மற்றும் Work done கட்டாயம் Table மீது இருக்க வேண்டும்.

No comments