Breaking News

ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை கணினி அறிவியல் பாடப்பிரிவு அமல்படுத்த வாட்ஸ்அப் மூலமாக கோரிக்கை மனு:


ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை கணினி அறிவியல் பாடப்பிரிவு அமல்படுத்த வாட்ஸ்அப் மூலமாக கோரிக்கை மனு

கணினி ஆசிரியர்கள் கலைஞரின் கனவு திட்டத்தை நிறைவேற்றக்கோரி முதலமைச்சர் , அமைச்சர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு குறுஞ்செய்தி வாயிலாக (டிஜிட்டல் முறையில் )கோரிக்கை மனு

இந்தியாவிலேயே முதல்முறையாக மாண்புமிகு முன்னாள் முதல்வர் கலைஞர் ஐயா அவர்களால் தொடங்கப்பட்ட கனவு திட்டமான சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தில் கணினி அறிவியல் பாடம் ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை  பாடப்புத்தகம்  வழங்கப்பட்டது. ஆட்சி மாற்ற காரணத்தினால் ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையிலான பாடத்திட்டம் செயல்படுத்தாமல் முடக்கப்பட்டது . அச்சடிக்கப்பட்ட புத்தகங்கள் அனைத்தும் *கழிவுகளாக கருதப்பட்டு  அகற்றப்பட்டுவிட்டன.

கணினிப் புரட்சிக்கு வித்திட்ட கலைஞரின் கனவுத் திட்டத்தை நிறைவேற்றுங்கள்

தற்பொழுது புதிய பாடதிட்டத்தில்  கணினி அறிவியல் பாடம் பெயரளவில் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளது.

ஒரு பள்ளிக்கு ஒரு கணினி ஆசிரியர் வீதம் நியமனம் செய்து அரசுப் பள்ளியின் தரத்தை காக்க ஆவன செய்ய வேண்டுகின்றோம்.

இதன் மூலமாக ஏழை எளிய மாணவர்களும் கணினிக் கல்வியை மேம்படுத்த செய்யலாம்

️ தொடர்ந்து பல வருடங்களாக பி.எட்., முடித்த கணினி பட்டதாரிகளுக்கு தமிழக அரசு & பள்ளி கல்வித்துறை சார்பில் நடத்தப்படும் எந்தவொரு தேர்விலும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. தேர்வு எழுத கூட தகுதியில்லாத ஒரு படிப்பாக கணினி அறிவியல் பாடப்பிரிவு அமைந்துள்ளது.

️ தற்போது TRB அறிவித்திருக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வில் கூட (TET) பி.எட்., முடித்த கணினி பட்டதாரிகளுக்கு தேர்வெழுத வாய்ப்பு வழங்கப்படவில்லை.

️ B.Sc., B.Ed & BCA., B.Ed., உள்ளிட்ட இளநிலை படிப்புகள் அரசு அறிவிக்கும் எந்தவொரு தேர்வையும் எழுத தகுதியில்லாத படிப்புகளாக உள்ளன.

️ 6 முதல் 10-ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் கணினி அறிவியல் பாடத்தை தனி ஒரு பாடமாகக் கொண்டுவர மீண்டும் தமிழக அரசும், பள்ளி கல்வித்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

️ இந்தியாவிலேயே முதன்முறையாக 2011-ஆம் ஆண்டில் சமச்சீர் கல்வியில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அய்யா அவர்களால் கணினி அறிவியல் பாடம் கொண்டுவரப்பட்டது. இந்த மாபெரும் திட்டம் (ICT) ஆட்சி மாற்றத்தினால் கைவிடப்பட்டது. இதனை தற்போதைய அரசு மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என 65,000 பி.எட்., கணினி பட்டதாரிகள் குடும்பங்களின் சார்பில் கேட்டுக்கொள்கின்றோம்.

️ எங்கள் பாடத்திற்கான உரிமையை கேட்கின்றோம்.

(செய்தி தொகுப்பு)

தா.சுந்தரவேலு

Cell No : 9751894315

மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் 

வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் 

சங்கம் பதிவு எண்:655/2014.

 

No comments