Breaking News

எல்.ஐ.சியில் சிங்கிள் ப்ரீமியம் செலுத்தி ரூ.12,000 ஓய்வூதியம் பெறலாம்.. எப்படின்னு தெரிஞ்சிக்கோங்க?

வாழ்க்கை பாதுகாப்பிற்கான இன்சூரன்ஸ் திட்டங்களை தேர்வு செய்பவர்களின் முதல் தேர்வாக எல்ஐசி இருக்கிறது. அதற்கு ஏற்ப வாடிக்கையாளர்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கக் கூடிய எண்ணற்ற பாலிசிகளை எல்ஐசி நிறுவனம் செயல்படுத்தி வருகிறது.

குறிப்பாக, நீங்கள் செய்யும் முதலீடுகளுக்கு வரிச்சலுகை பெற்றுக் கொள்ளலாம். நாட்டிலேயே வெற்றிகரமாக இயங்கும் மிகப் பெரிய இன்சூரன்ஸ் நிறுவனம் என்பதாலும், பொதுத்துறை நிறுவனம் என்பதாலும் பலர் இதில் முதலீடு செய்கின்றனர்.

இதுபோன்ற திட்டங்களில் ஒன்று தான் எல்ஐசி சரல் பென்ஷன் (LIC Saral Pension Yojana) திட்டம் ஆகும். இதில் முதலீடு செய்யும் வாடிக்கையாளர்கள், குறைந்தபட்சமாக ஆண்டுதோறும் ரூ.12,000 ஓய்வூதியம் பெற முடியும். ஒரு தவணையில் முதலீட்டாளர்கள் பெரும் தொகையை செலுத்தி, அவர்களுக்கு வழங்கப்படும் இரண்டு விதமான ஆனுய்டி பலன்களுக்கான வாய்ப்புகளில் ஒன்றை தேர்வு செய்து கொள்ளலாம்.

எல்ஐசி சரல் ஓய்வூதியத் திட்டத்தில் வழங்கப்படும் இரண்டு வாய்ப்புகள்..

Option 1 :

முதலாவது வாய்ப்பின் கீழ் வாழ்நாள் ஆனுய்டி பலனை முதலீட்டாளர்கள் தேர்வு செய்து கொள்ளலாம். இதில், பர்ச்சேஸ் பிரைஸ் தொகையில் 100 சதவீத ரிட்டர்ன் கிடைக்கும். இந்த வாய்ப்பின் கீழ், வாடிக்கையாளரின் வாழ்நாள் முழுமைக்கும் வருடாந்திர பேமெண்ட் அரியர்களை எல்ஐசி நிறுவனம் வழங்கிக் கொண்டிருக்கும். பாலிசிதாரர் இறக்கும் பட்சத்தில், அவருக்கான ஆண்டுத்தொகை நிறுத்தப்படும். அவரது வாரிசுதாரருக்கு பர்ச்சேஸ் தொகையின் 100 சதவீத ரிட்டன் கிடைக்கும்.

Option 2: 

இதில் இரண்டு நபர்கள் வருடாந்திர பலன்களை இணைந்து பெற்றுக் கொள்ளலாம். பாலிசிதாரர்களில் கடைசி நபர் உயிரிழந்த பிறகு அவர்களது பர்ச்சேஸ் தொகையில் 100 சதவீதம் ரிட்டன் வழங்கப்படும். பாலிசிதாரர் அல்லது அவரது மனைவி உயிரோடு இருக்கும் காலம் வரையிலும் வருடாந்திர பலன்களை பெற்றுக் கொள்ளலாம். இருவரில் கடைசி நபர் உயிரிழந்த பிறகு, பேமெண்ட் தொகை நிறுத்தப்படும். எஞ்சியுள்ள பலன்கள் அவர்களது வாரிசுதாரர்களுக்கு செலுத்தப்படும்

No comments