Breaking News

CPS ரத்து செய்து பழைய ஓய்வூதியத்தை நடைமுறைப்படுத்தும் வடமாநிலங்கள்:

 

வட மாநிலங்களான ராஜஸ்தான்,சத்தீஸ்கர் மாநிலத்தை தொடர்ந்து அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை - ஜார்க்கண்ட் மாநிலமும் அதிரடியாக அறிவித்துள்ளது!

அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் - ஜார்க்கண்ட் அதிரடி அறிவிப்பு!

அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த உள்ளதாக ஜார்கண்ட் முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

நாடு முழுவதும் உள்ள மத்திய அரசு ஊழியர்களும் மாநில அரசு ஊழியர்களும் நடைமுறையில் உள்ள புதிய ஓய்வூதியத் திட்டத்தை நீக்கிவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று நீண்ட காலமாகவே கோரிக்கை வைத்து வருகின்றனர். இத்திட்டம் அமலுக்கு வந்தால் ஊழியர்களுக்கு அதிகப் பயன் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தாமல் மத்திய அரசு இந்த விஷயத்தில் அடம் பிடித்து வருகிறது. அதேநேரத்தில், ஊழியர்களின் நலன்கருதி, மாநில அரசுகள் இது குறித்து பரிசீலனை செய்தன. இதன் முடிவில் தற்போது சில மாநில அரசுகள், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த முன்வந்துள்ளன. அந்த வகையில், இந்த அறிவிப்பை முதலில் வெளியிட்டது ராஜஸ்தான் அரசுதான்.

மனசு மாறும் மாநிலங்கள் முதலில் ராஜஸ்தான் மாநிலத்தில் பழைய ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்பட்ட நிலையில், வாரங்களுக்கு நாட்களுக்கு முன்னர் சத்தீஸ்கர் மாநிலமும் இத்திட்டத்தை அறிவித்தது. இரண்டு மாநிலங்கள் மட்டுமே இப்போது பழைய ஓய்வூதியத் திட்டத்துக்கு மாறியுள்ள நிலையில், மற்ற மாநிலங்களும் ஒவ்வொன்றாக இத்திட்டத்துக்கு மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மகிழ்ச்சியில் ஊழியர்கள் இந்த வரிசையில் தற்போது ஜார்கண்ட் அரசும் மனம் மாறியுள்ளது.

ஜார்கண்ட் மாநில முதலமைச்சர் ஹேமந்த் சோரன் அம்மாநில சட்டப்பேரவையில் பொதுமக்கள் நலன் தொடர்பான பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.அதில், பழைய ஓய்வூதியத் திட்டமும் அமல்படுத்தப்படும் என்று அறிவித்துள்ளார்.இந்த அறிவிப்பு, அம்மாநில அரசு ஊழியர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய அரசு மாறுமா?
மாநிலங்களின் இந்த முடிவைத் தொடர்ந்து மத்திய அரசும் விரைவில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் தற்போதைய நிலையில் அதற்கு வாய்ப்பே இல்லை என்று மத்திய அரசு தரப்பில் கூறப்படுகிறது.

No comments