Breaking News

மத்திய அரசு ஊழியர்களுக்கு அதிரடி அறிவிப்பு – அகவிலைப்படி (DA) உயர்வு குறித்து நாளை அறிவிப்பு?

 

மத்திய அரசு ஊழியர்களுக்கு அதிரடி அறிவிப்பு – அகவிலைப்படி (DA) உயர்வு குறித்து நாளை அறிவிப்பு?

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி (DA) உயர்வு மூலம் ஹோலி பண்டிகைக்கான பரிசை அரசு வழங்கலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இதன் மூலம் அரசு ஊழியர்களின் மொத்த DA 34% ஆக உயரும்.

அகவிலைப்படி உயர்வு

கொரோனா பரவல் காரணமாக மத்திய அரசு ஊழியர்களுக்கு கடந்த 18 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அகவிலைப்படி (DA) தொகை 2021 அக்டோபர் மாதத்தில் 31% ஆக உயர்த்தி அறிவிக்கப்பட்டது. இந்த தொகை எப்போது அரசு ஊழியர்களின் வாங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில் இப்போது மீண்டுமாக அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி கிடைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அந்த வகையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஹோலிக்கு முன் DA உயர்வு குறித்த நல்ல செய்தி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

இப்போது மத்திய அரசு, ஊழியர்களின் அகவிலைப்படியை 3 சதவீதம் அதிகரிக்கலாம் என்றும் இது குறித்த முடிவு நாளை (மார்ச்.16) வெளியாகலாம் என்றும் பல்வேறு தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த வகையில் இந்த மாதம் DA அதிகரிக்கப்படும் என அரசாங்கம் அறிவித்தால், இந்த உயர்வு ஜனவரி 1, 2022 முதல் அமலுக்கு வரும். தற்போது வரை மத்திய அரசு ஊழியர்களுக்கு 31 சதவீதம் DA வழங்கப்படுகிறது. இப்போது மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 3 சதவீதம் உயர்த்தப்பட்டால் மொத்த DA தொகை 34 சதவீதமாக உயரும்.

7வது ஊதியக் குழுவின் பரிந்துரையின்படி, ஆண்டுக்கு இரண்டு முறை (ஜனவரி மற்றும் ஜூலையில்) என்ற அடிப்படையில் அரசாங்கம் DA தொகையை திருத்துகிறது. இப்போது 3% DA உயர்வு குறித்து அரசு முடிவெடுத்தால் 48 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 65 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இந்த அகவிலைப்படி என்பது பணவீக்க உயர்வால் ஏற்படும் பாதிப்பை குறைப்பதற்காக அரசால் வழங்கப்படும் ஒரு சலுகை ஆகும். இந்த அகவிலைப்படி கணக்கீடு என்பது ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தின் அடிப்படையில் செய்யப்படுகிறது குறிப்பிடத்தக்கது.

No comments