Breaking News

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஊதியத்தில் அகவிலைப்படி மேலும் 3% அதிகரிப்பு – விரைவில் அறிவிப்பு!

இந்த கொரோனா கால கட்டத்தில் தான் 28 சதவீதமாக இருந்த சம்பளம் அகவிலைப்படி 3 சதவீதம் அதிகரித்து 31% ஆக இருந்தது. மேலும், இந்த மார்ச் மாதத்தில் 3% அகவிலைப்படி சம்பள உயர்வு இருக்கலாம் என எதிர்ப்பார்க்கப்பட்டது. அகவிலைப்படி சம்பளம் 3% அதிகரித்தால் மத்திய ஊழியர்களின் சம்பளம் ரூ.20,000 வரை உயரக்கூடும். மார்ச் 16-ம் தேதி ஹோலி பண்டிகையை முன்னிட்டு 3% அகவிலைப்படி சம்பள உயர்வு இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

3% அதிகரித்தால் அகவிலைப்படி மத்திய அரசு ஊழியர்களுக்கு 34% சம்பளம் கிடைக்கும். உதாரணமாக ஊழியர் ஒருவர் 18, 000 ரூபாய் சம்பளம் வாங்கி கொண்டு இருக்கிறார் எனில், சம்பள உயர்வு 3% அதிகரித்தால் அவர்களுக்கு ஒரு மாதத்திற்கு 540 ரூபாய் அதிகமாக கிடைக்கும். இதனால் ஆண்டுக்கும் 6,480 ரூபாய் அதிகமாக கிடைக்கும். பணியாளரின் அடிப்படை சம்பளம் ரூ 56,900 ஆக இருக்கும் எனில் சம்பள உயர்வு 3% அதிகரித்தால் அவர்களுக்கு ஒரு மாதத்திற்கு 1,707 ரூபாய் அதிகமாக கிடைக்கும். இதனால் ஆண்டுக்கும் 20,484 ரூபாய் அதிகமாக கிடைக்கும். இது தவிர மத்திய அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வு மற்றும் பல சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது.

No comments