Breaking News

அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தில் உள்ள நன்மைகள் – முழு விபரங்கள் இதோ!

இந்நிலையில் அரசுக்கு இருந்த நிதி பற்றாகுறையின் காரணமாக பழைய ஓய்வூதிய முறை ரத்து செய்யப்பட்டு, புதிய ஓய்வூதியத் திட்டத்தை கடந்த 2003ம் ஆண்டு முதல் செயல்முறையில் இருந்து வருகிறது. மேலும் புதிய ஓய்வூதிய திட்டமானது, ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு மாதந்தோறும் ஓய்வூதியம் வழங்காமல் பணி ஓய்வு பெறும்போது ஒரு குறிப்பிட்ட தொகையை மொத்தமாக வழங்கும் அடிப்படையில் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் இந்த திட்டத்துக்கு அரசு ஊழியர்களின் சார்பில் எதிர்ப்பு எழுந்து வருகிறது. இந்நிலையில் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, மறுபடியும் பழைய ஓய்வூதிய திட்டத்தையே அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் அரசு ஊழியர்கள் கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு மேலாக கோரிக்கையாக வைத்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது வரை ராஜஸ்தான், இமாச்சலப் பிரதேசம் மற்றும் ஜார்கண்ட் ஆகிய மாநில அரசுகள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளனர். ஏப்ரல் 1, 2004 முதல் நாட்டில் அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டம் நிறுத்தப்பட்டு, புதிய தேசிய ஓய்வூதிய முறை (NPS) அமல்படுத்தப்பட்டது. இதனால் மற்ற மாநில அரசு ஊழியர்களும் போராடி வருகின்றனர். இந்த நிலையில் மீண்டும் அந்த திட்டம் செயல்முறைக்கு வருமா என்று பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

 

No comments