Breaking News

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு கல்வி நிறுவனங்களில் கூடுதல் இடங்கள் - யுஜிசி கடிதம்:

கொரோனா தொற்று காரணமாக பெற்றோரை இழந்துள்ள குழந்தைகளுக்கென கூடுதல் இடங்கள் உருவாக்க வேண்டுமென உயரக்கல்வி நிறுவனங்களுக்கு பல்கலை மானியக்குழு கடிதம் எழுதியுள்ளது.

பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கு அனுப்பிய கடிதத்தில், " கோவிட்-19 காரணமாக பெற்றோரை இழந்துள்ள குழந்தைகளுக்கு ஆதரவளிப்பதற்காக பிஎம் கேர்ஸ் திட்டத்தை (PM CARES for Children Scheme) இந்திய அரசு அறிவித்தது. அனைத்து மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களின் மாவட்ட ஆட்சியர்களுடன் ஒன்றிணைந்து பெண்கள் மற்றும் குழந்தைகள் நலன் மேம்பாட்டு அமைச்சகம்  தகுதியுடைய குழந்தைகளை அடையாளம் கண்டு வருகிறது. இதன் மூலம், குழந்தைகளை பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அடையாளம் காணப்பட்ட குழந்தைகளுக்கு, 2021, குழந்தைகளுக்கான பிஎம் கேர்ஸ் திட்டச் சான்றிதழ்கள் (PM CARES for Children Scheme, 2021) வழங்கப்படும். இதை  கருத்தில் கொண்டு, அனைத்து உயர்கல்வி நிறுவனங்களும் கூடுதல் இடங்களை உருவாக்க பரிந்துரைக்கப்படுகின்றன" என்று கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments