Breaking News

பள்ளிக்கூடம் இங்கு ஆசிரியராய் இருக்க முடியாது.. வேண்டுமென்றால் ஆசிரியர் போல இருக்கலாம்.. பள்ளிக்கூடம் ஆசிரியர்களே நாம் ஒவ்வொருவரும் தெரிந்துகொள்ள வேண்டிய வரிகள் :

இங்கு
ஆசிரியராய்
இருக்க முடியாது..
வேண்டுமென்றால்
ஆசிரியர் போல
இருக்கலாம்..

மாணவன்
படிக்கமாட்டான்..
ஆசிரியர்
பாடம் நடத்த வேண்டும்..

அவன் எழுததேவையில்லை.
ஆனால்
மதிப்பெண் இலவசம்..

அவனுக்கு தேர்ச்சி
பற்றி
தைரியம் அதிகம்..
ஆசிரியருக்குத்தான்
ஆயிரம் பயங்கள்..

அவன் பள்ளி வர
கட்டாயமில்லை..
ஆசிரியருக்கு விடுப்பு எனில் கடுப்பு காட்டுவர்..

இருட்டுக்கு சுதந்திரம்
இங்கு
வெளிச்சத்தின் மீதுதான்
ஆயிரம் கட்டுப்பாடுகள்..

அதனால்
சொல்கிறேன்..
இங்கு ஆசிரியராய்
இருக்க முடியாது..
வேண்டுமென்றால் ஆசிரியர் போல இருக்கலாம்..

No comments