Breaking News

பங்குனி : 14 திங்கள்~கிழமை 28- 03- 2022 ராசி- பலன்கள் :

 

 🔯 மேஷம் -ராசி: 🐐
பெரியோர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் முன்னேற்றமான சூழல் அமையும். குடும்பத்தில் சூழ்நிலைக்கேற்ப விட்டுக்கொடுத்து செல்லவும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான வெளியூர் பயணங்கள் சாதகமாகும். எந்தவொரு செயலிலும் பொறுமையை கடைபிடிப்பது நல்லது. சொத்துக்கள் சம்பந்தமான பிரச்சனைகளில் அனுகூலம் உண்டாகும். முயற்சிகள் ஈடேறும் நாள்.

💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 6
💠அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்.

⭐️அஸ்வினி : முன்னேற்றமான நாள்.
⭐️பரணி : பயணங்கள் சாதகமாகும்.
⭐️கிருத்திகை : அனுகூலமான நாள்.


🔯 ரிஷபம் -ராசி:  🐂
சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு சாதகமான சூழல் உண்டாகும். உறவினர்களுக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் மறையும். உத்தியோக பணிகளில் இருந்துவந்த எதிர்ப்புகள் குறையும். தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கப் பெறுவீர்கள். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சுபகாரியம் தொடர்பான முயற்சிகள் ஈடேறும். இன்பமான நாள்.

💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 2
💠அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்.

⭐️கிருத்திகை : சாதகமான நாள்.
⭐️ரோகிணி : எதிர்ப்புகள் குறையும்.
⭐️மிருகசீரிஷம் : முயற்சிகள் ஈடேறும்.


🔯 மிதுனம் -ராசி: 👫
வெளியூர் பயணங்களால் புதுவிதமான அனுபவம் உண்டாகும். எதிர்காலம் சார்ந்த செயல்பாடுகளில் விழிப்புணர்வு வேண்டும். கடன் சார்ந்த முயற்சிகளில் சிந்தித்து செயல்படவும். உத்தியோக பணிகளில் கவனத்துடன் செயல்படவும். எந்தவொரு காரியத்திலும் ஆர்வமின்றி செயல்படுவீர்கள். ஆடம்பர செலவுகளின் மூலம் சேமிப்பு குறையும். மதிப்பு மேம்படும் நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 1
💠அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்.

⭐️மிருகசீரிஷம் : அனுபவம் ஏற்படும்.
⭐️திருவாதிரை : சிந்தித்து செயல்படவும்.
⭐️புனர்பூசம் : சேமிப்பு குறையும்.


🔯 கடகம் -ராசி: 🦀
புதுவிதமான பொலிவுடன் காணப்படுவீர்கள். உயர்கல்வி தொடர்பான செயல்பாடுகளில் தெளிவு பிறக்கும். பூர்வீக சொத்துக்களின் மூலம் சாதகமான சூழல் ஏற்படும். உங்களின் பலம் மற்றும் பலவீனத்தை அறிந்து கொள்வீர்கள். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். வியாபார ரீதியாக வெளிவட்டார நட்பு கிடைக்கும். புதிய இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள். விருப்பம் நிறைவேறும் நாள்.

💠அதிர்ஷ்ட திசை : வடக்கு
💠அதிர்ஷ்ட எண் : 2
💠அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை.

⭐️புனர்பூசம் : தெளிவு பிறக்கும்.
⭐️பூசம் : நெருக்கம் அதிகரிக்கும்.
⭐️ஆயில்யம் : நட்பு கிடைக்கும்.


🔯 சிம்மம் -ராசி:  🦁
மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தொழிலில் இருந்துவந்த மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். வெளிவட்டாரத்தில் புதுவிதமான அனுபவம் உண்டாகும். ஆன்மிக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். எதிர்பாராத உதவியின் மூலம் மாற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். கடினமான செயல்களையும் எளிதில் செய்து முடிப்பீர்கள். சுகமான நாள்.

💠அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 3
💠அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்.

⭐️மகம் : எதிர்ப்புகள் நீங்கும்.
⭐️பூரம் : ஈடுபாடு அதிகரிக்கும்.
⭐️உத்திரம் : வாய்ப்புகள் கிடைக்கும்.


🔯 கன்னி -ராசி: 🧛‍♀️
எடுக்கும் முயற்சிகளில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் நன்மை ஏற்படும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். காப்பீடு தொடர்பான தனவரவு கிடைப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படும். பொருளாதாரம் தொடர்பான விஷயங்களில் மேன்மை உண்டாகும். வெற்றி கிடைக்கும் நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 6
💠அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்.

⭐️உத்திரம் : அனுசரித்து செல்லவும்.
⭐️அஸ்தம் : துரிதம் ஏற்படும்.
⭐️சித்திரை : மேன்மை உண்டாகும்.


🔯 துலாம் -ராசி: ⚖
சுபகாரியம் தொடர்பான முயற்சிகள் ஈடேறும். வெளிவட்டாரத்தில் உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். பொன், பொருள் சேர்க்கை பற்றிய எண்ணம் மேம்படும். வியாபாரத்தில்  நுட்பமான சிந்தனைகளின் மூலம் லாபம் உண்டாகும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். வெளியூர் பயணங்களின் மூலம் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். தன்னம்பிக்கையான நாள்.

💠அதிர்ஷ்ட திசை : வடக்கு
💠அதிர்ஷ்ட எண் : 9
💠அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்.

⭐️சித்திரை : நம்பிக்கை அதிகரிக்கும்.
⭐️சுவாதி : லாபம் உண்டாகும்.
⭐️விசாகம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.


🔯 விருச்சிகம் -ராசி: 🦂
எந்தவொரு செயலிலும் முன் கோபத்தை குறைத்து கொண்டு செயல்படுவது நல்லது. சமூகத்தில் உங்களுடைய மதிப்பு அதிகரிக்கும். உடன்பிறந்தவர்களால் நன்மை ஏற்படும். பழைய நினைவுகளின் மூலம் செயல்பாடுகளில் தடுமாற்றம் உண்டாகும். உழைப்பிற்கு உண்டான பாராட்டுகள் கிடைக்கும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். உதவி கிடைக்கும் நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 1
💠அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்.

⭐️விசாகம் : மதிப்பு அதிகரிக்கும்.
⭐️அனுஷம் : தடுமாற்றம் உண்டாகும்.
⭐️கேட்டை : வாய்ப்புகள் ஏற்படும்.


🔯 தனுசு -ராசி: 🏹
மனதில் நினைத்த காரியங்கள் எண்ணிய விதத்தில் நிறைவேறும். மாணவர்களுக்கு விளையாட்டு சார்ந்த செயல்பாடுகளில் ஆர்வம் உண்டாகும். ஆடம்பர பொருட்களின் மீது விருப்பம் அதிகரிக்கும். பயணங்களால் அலைச்சல் ஏற்பட்டாலும் ஆதாயம் உண்டாகும். சாதுர்யமான பேச்சுக்களால் அனைவரையும் கவர்வீர்கள். வரவு மேம்படும் நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு.
💠அதிர்ஷ்ட எண் : 9
💠அதிர்ஷ்ட நிறம் : கருஞ்சிவப்பு.

⭐️மூலம் : எண்ணங்கள் ஈடேறும்.
⭐️பூராடம் : விருப்பம் அதிகரிக்கும்.
⭐️உத்திராடம் : ஆதாயகரமான நாள்.


🔯 மகரம் -ராசி: 🐴
குடும்பத்துடன் வெளியூர் பயணம் சென்று வருவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் சோர்வு ஏற்பட்டு நீங்கும். விருந்தினர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். கூட்டாளிகளின் ஆலோசனையால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த மனவருத்தங்கள் குறையும். உடனிருப்பவர்களிடத்தில் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். தடைகள் குறையும் நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தெற்கு
💠அதிர்ஷ்ட எண் : 8
💠அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்.

⭐️உத்திராடம் : சோர்வு நீங்கும்.
⭐️திருவோணம் : முன்னேற்றமான நாள்.
⭐️அவிட்டம் : விவாதங்களை தவிர்க்கவும்.

🔯 கும்பம் -ராசி: ⚱
புதிய தொழில் தொடங்குவது தொடர்பான முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பணிகளில் சாதகமான சூழல் அமையும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கமான சூழ்நிலை காணப்படும். அரசு சம்பந்தமான செயல்பாடுகளில் காலதாமதம் உண்டாகும். மனதை உறுத்திய சில விஷயங்களுக்கு தெளிவு கிடைக்கும். அமைதி வேண்டிய நாள்.

💠அதிர்ஷ்ட திசை : வடக்கு
💠அதிர்ஷ்ட எண் : 7
💠அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்.

⭐️அவிட்டம் : சாதகமான நாள்.
⭐️சதயம் : காலதாமதம் உண்டாகும்.
⭐️பூரட்டாதி : தெளிவு கிடைக்கும்.

🔯 மீனம் -ராசி: 🐠
மூத்த உடன்பிறப்புகளின் மூலம் ஆதாயம் உண்டாகும். உயர் அதிகாரிகளின் மூலம் ஒத்துழைப்பான சூழல் ஏற்படும். தொழிலை அபிவிருத்தி செய்வதற்கான தனவரவு கிடைக்கும். பிள்ளைகளின் மூலம் பெருமை உண்டாகும். மகான்களின் தரிசனம் மற்றும் ஆசிகள் கிடைக்கப் பெறுவீர்கள். சுபகாரிய முயற்சிகளில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். அன்பு நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 1
💠அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்.

⭐️பூரட்டாதி : ஆதாயகரமான நாள்.
⭐️உத்திரட்டாதி : வரவு கிடைக்கும்.
⭐️ரேவதி : முடிவு ஏற்படும்.

No comments