Breaking News

இதயம், கண் சார்ந்த பரிசோதனைகளை ஸ்மார்ட்போனிலேயே செய்யும் அம்சம்... கூகுள் அறிவிப்பு

இதயம், கண் சார்ந்த பரிசோதனைகளை ஸ்மார்ட்போனிலேயே செய்யும் அம்சம்... கூகுள் அறிவிப்பு
கூகுள்
கூகுள் நிறுவனம் ஸ்மார்ட்போனை பயன்படுத்தி இதயம் மற்றும் கண் கோளாறு சார்ந்த பிரச்சனைகளை கண்டறியும் வசதியை உருவாக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது. 

இதன்மூலம் லட்சக்கணக்கான ஆண்ட்ராய்டு பயனர்கள் தங்கள் ஆரோக்கிய நிலையை வீட்டில் இருந்தே கண்டறிய முடியும் என தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கூகுள் கூறியதாவது,
இதய துடிப்பு மற்றும் செயல்பாட்டை கண்டறியும் செயல்முறையை நாங்கள் பரிசோதனை செய்து வருகிறோம். ஸ்மார்ட்போனை நெஞ்சில் வைப்பதன் மூலம்  மைக்ரோபோன்களை கொண்டு இதயம் துடிக்கும் சத்தத்தை பதிவு செய்ய முடியும். மருத்துவர்கள் ஸ்தெதஸ்கோப் உதவியை கொண்டு இதயம் மற்றும் நுரையீரல் சார்ந்த ஆரோக்கியத்தை கண்டறிகின்றனர். இதனை ஸ்மார்ட்போன் மைக்ரோபோனை கொண்டே செய்ய நாங்கள் திட்டமிட்டு வருகிறோம்.

இந்த மருத்துவ பரிசோதனையின் ஆரம்ப கட்டத்தில் நாங்கள் இருக்கிறோம். ஆனால் விரைவில் ஸ்மார்ட்போன் செயல்முறையை செயல்படுத்துவோம்.

அதேபோல ஸ்மார்ட்போன் மூலம் கண்பரிசோதனை செய்யும் அம்சத்தையும் நாங்கள் திட்டமிட்டுள்ளோம். 

ஸ்மார்ட்போன் கேமராக்களை கொண்டு நீரிழிவு மற்றும் நீரிழிவு அல்லாத கண் சார்ந்த பிரச்சனைகளை கண்டறிய திட்டமிட்டுள்ளோம். இதற்காக EyePACS மற்றும் Chang Gung மருத்துவமனையின் உதவியை நாடியுள்ளோம்.

எங்கள் விஞ்ஞானிகள் மருத்துவர்களின் உதவியுடன் இந்த ஆய்வை மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பயன்பட்டு வருகிறது என கூறப்பட்டுள்ளது.

No comments