Breaking News

பிஎஃப் வட்டி விகிதம் 8.1% ஆக குறைப்பு.. ஊழியர்கள் கடும் அதிருப்தி..!

ஊழியர்கள் அதிர்ச்சி இந்த வட்டி விகிதம் அதிகரிக்கப்படலாம் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த வட்டி விகிதம் குறைந்துள்ளது. நாட்டில் பணவீக்க விகிதம் உச்சத்தினை எட்டி வரும் நிலையில், வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது ஊழியர்கள் மத்தியில் பேரதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. ஆறுதல் தரும் விஷயம் எப்படியிருப்பினும் இதில் சற்றே ஆறுதல் தரும் விஷயம் என்னவெனில், மற்ற முதலீட்டு திட்டங்களுடன் ஒப்பிடும்போது இந்த வட்டி விகிதமானது அதிகமே. குறிப்பாக நாட்டின் முன்னணி வங்கிகளில் கூட வைப்பு நிதிகளுக்கான வட்டி விகிதம் 5 - 6% என்ற அளவிலேயே இருந்து வருகின்றது.

 ஆக அதனுடன் ஒப்பிடும்போது இந்த விகிதம் அதிகம் தான். எனினும் பலரும் இந்த வருங்கால வைப்பு நிதி திட்டங்களை நாடுவது, இதில் வட்டி விகிதம் அதிகம் என்பதால் தான். ஆனால் இதிலும் தற்போது வட்டி விகிதம் குறையத் தொடங்கியிருப்பது சற்றே கவலையை ஏற்படுத்தியுள்ளது. 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிவு கொரோனா நெருக்கடி மத்தியில் பொருளாதார வளர்ச்சி என்பது தற்போது தான் மீண்டு வரத் தொடங்கியுள்ளது. இதற்கிடையில் வட்டி விகிதம் அதிகரிக்கப்பட்டால், கடும் நிதி நெருக்கடியினை ஏற்படுத்தலாம் என்ற அச்சம் இருந்து வருகின்றது. 

இதற்கிடையில் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்ட போதிலும் கடந்த 2 ஆண்டுகளாகவே பிஎஃப் மீதான வட்டி விகிதம் என்பது குறைக்கப்படாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் தான் தற்போது வட்டி விகிதம் சற்று குறைக்கப்பட்டுள்ளது. பாதிப்பு இபிஎஃப்ஓ அமைப்பின் இந்த முடிவானது 60 மில்லியன் சந்தாதாரர்களை பாதிக்கலாம். இது கடந்த 1977 - 78 ஆம் ஆண்டில் இருந்து பார்க்கும்போது மிக குறைவாகும். அப்போது வட்டி விகிதம் 8% ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. இது கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தற்போது குறைந்துள்ளது.

No comments