Breaking News

குரு பெயர்ச்சி பலன் 2022: குரு தரும் ஹம்சயோகத்தால் பலனடையப்போகும் ராசிக்காரர்கள் நீங்கதான் :

சந்திரனுக்கு கேந்திரத்தில் குரு ஆட்சி, உச்சம் பெற்றிருந்தால், ஹம்சயோகம் உண்டாகிறது. குருபகவான் தரும் மிகப்பெரிய ராஜயோகமாகும். நல்ல உடலமைப்பையும், ஒழுக்கமான வாழ்க்கையும் ஏற்றவர்களாக இந்த யோகத்தில் பிறந்தவர்கள் இருப்பர். குரு கடகத்தில் உச்சம் பெற்றும், உபய லக்னங்களுக்கு தனுசு, மீனத்தில் ஆட்சி பெற்றும் ஹம்ச யோகத்தை அளிப்பார். இந்த அமைப்பில் குரு பலம் பெறுவதால் அவரது சுப காரகத்துவங்கள் ஜாதகருக்கு மேலோங்கி நிற்கும். இன்றும் சில நாட்களில் குரு பெயர்ச்சி நிகழ உள்ளது. மீன ராசியில் ஆட்சி பெற்று அமரப்போகும் குருபகவானால் ஹம்ச யோகம் பெறப்போகும் ராசிக்காரர்கள் யார் என்று பார்க்கலாம். மாதம் ரூ. 4999 செலுத்தி சென்னையில் வீடு வாங்கி செம சான்ஸ் பஞ்ச மகா புருஷ யோகங்களில் ஒன்றான ஹம்ச யோகம் குரு பகவானால் ஏற்படுவது ஆகும். ஒருவரது சுய ஜாதகத்தில் குரு கேந்திர ஸ்தானத்தில் அதாவது 1,4, 7, 10 ஆகிய நான்கு இடங்களில் ஏதாவது ஒன்றில் இருக்க வேண்டும். அது குருவின் சொந்த வீடுகளான தனுசு மீனம் அல்லது உச்ச வீடான கடகம் ஆகிய ராசிகளாக இருக்க வேண்டும். 

இந்த இரண்டு விதிகளின்படி குரு அமைந்திருந்தால் அது ஹம்ச யோகமாகும். நீளும் லிஸ்ட்.. இலங்கை மட்டுமில்லை.. இந்த 5 நாடுகளிலும் கடும் பொருளாதார நெருக்கடிதான்.. அதிர்ச்சி! நீளும் லிஸ்ட்.. இலங்கை மட்டுமில்லை.. இந்த 5 நாடுகளிலும் கடும் பொருளாதார நெருக்கடிதான்.. அதிர்ச்சி!  ஹம்ச யோகத்தில் பிறந்த ஜாதகர்களின் குடும்பம் பெரும்பாலும் பாரம்பரியங்களை மதித்து போற்றுவதாகவும், ஊர் மக்களின் நன்மதிப்பை பெற்றதாகவும் இருக்க வாய்ப்புகள் அதிகம். இந்த யோகத்தில் பிறந்தவர்கள் நல்ல உயரமான தோற்றத்தையும், வெளிர் நிற மேனியையும் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களின் முகத்தில் இயற்கையாகவே ஒரு தெய்வீக தேஜஸ் இருக்கும். இந்த குரு பெயர்ச்சியால் சில ராசிக்காரர்களுக்கு ஹம்சயோகம் கிடைக்கப்போகிறது. 

குரு பகவான் தரும் அதிர்ஷ்டம் குரு பகவான் தரும் அதிர்ஷ்டம் ஒருவரின் ஜாதகத்தில் குரு வலுப்பெற்று அமர்ந்து பத்தாமிடத்தோடு சம்பந்தப்படும் நிலையில், ஒருவரை பணத்தை இரட்டிப்பாக்கும் வட்டித் தொழில் மற்றும் ஜுவல்லரி போன்றவைகளில் ஈடுபட வைத்து பெரிய லாபங்களைத் தருவார். ஒருவரின் ஜாதகத்தில் குரு ஆறு, எட்டு போன்ற இடங்களில் மறைந்தோ, பகை, நீசம் பெற்றோ இருந்தால் சனி, ராகு போன்ற பாபக் கிரகங்களுடன் தொடர்பு கொண்டோ இருந்தால் தன லாபத்தை தடை செய்வார், புத்திரபாக்கிய தடையும் ஏற்படும். செல்வ வளம் தரும் அஷ்டலட்சுமி யோகம் செல்வ வளம் தரும் அஷ்டலட்சுமி யோகம் ஒருவரின் ஜாதகத்தில் குரு ஒன்று, நான்கு, ஏழு, பத்து எனப்படும் கேந்திர ஸ்தானங்களில் இருந்து ராகு ஆறாமிடத்தில் இருந்தால் அஷ்டலட்சுமி யோகம் அமைவதாக ஜோதிட நூல்கள் குறிப்பிட்டுள்ளன. 

ஆறாமிடத்தில் அசுபக் கிரகமான ராகு இருப்பதால் ருண ரோக சத்ரு ஸ்தானமான ஆறாம் வீட்டில் கெட்ட ஆதிபத்தியங்களான கடன், நோய், எதிரி ஆகியவை ஒழிக்கப்பட்டு அந்த பாவம் ஜாதகருக்கு சுப விஷயங்களைச் செய்யும் என்பது ஜோதிட விதி. குரு தரும் ஹம்ச யோகம் குரு தரும் ஹம்ச யோகம் சந்திரனுக்கு கேந்திரத்தில் குரு ஆட்சி, உச்சம் பெற்றிருந்தால், ஹம்சயோகம் உண்டாகிறது. குருபகவான் தரும் மிகப்பெரிய ராஜயோகமாகும். குரு ஹம்ச யோகம் தரும் நிலையில் அவருக்கு எதிர்த் தன்மையுடைய கிரகங்களான சுக்ரன், சனி, புதன் ஆகியோருடன் சேருவது, இவர்கள் குருவைப் பார்ப்பது யோகத்தைக் குறைத்து விடும். அதேநேரத்தில் குருவின் நண்பர்களான சந்திரன், சூரியன், செவ்வாய் ஆகியோர் குருவைப் பார்த்தாலோ, இணைந்தாலோ யோகம் இன்னும் வலுப்பெறும். ஹம்ச யோகத்தின் பலன் ஹம்ச யோகத்தின் பலன் சர லக்னங்களான மேஷம், கடகம், துலாம், மகர லக்னத்தில் பிறந்தவர்கள் குருவால் உண்டாகும் ஹம்ச யோகத்தின் முழுப் பலனையும் அனுபவிப்பவர்கள் உபய லக்னங்களான தனுசு, மீனம், மிதுனம், கன்னி ராசிக்கு இந்த யோகம் அமையப் பெறும். ஆனால் குருவின் கேந்திராதிபத்ய தோஷத்தினால் அவர்களுக்கு யோகம் முழுமை பெறாது. 

சர லக்னங்களுக்கு குரு கடகத்தில் உச்சம் பெற்றும், உபய லக்னங்களுக்கு தனுசு, மீனத்தில் ஆட்சி பெற்றும் ஹம்ச யோகத்தை அளிப்பார். இந்த அமைப்பில் குரு பலம் பெறுவதால் அவரது சுப காரகத்துவங்கள் ஜாதகருக்கு மேலோங்கி நிற்கும். தனுசு மற்றும் மீனம் தனுசு மற்றும் மீனம் நிகழப்போகும் குரு பெயர்ச்சியால் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு சென்று ஆட்சி பெற்று அமரப்போகிறார். ஹம்ச யோகம் தரும் அமைப்பாகும். தனுசு ராசிக்கு நான்காம் வீட்டில் ஆட்சி பெற்று அமர்கிறார். தனுசு, மீனம் ராசிக்கு குரு அதிபதி என்றாலும் கேந்திரங்களில் அமர்ந்தால் கேந்திராதிபத்ய தோஷம் வரும். எனினும் இந்த குரு பெயர்ச்சியால் சில நேரங்களில் ஹம்சயோகம் செயல்பட்டு திடீர் பண வரவைத் தருவார் குருபகவான். மிதுனம் மிதுனம் மிதுனம் மற்றும் கன்னி லக்னக்காரர்களுக்கு குரு பகவான் கேந்திரமான 4, 7 , மற்றும் 10ஆம் வீட்டில் அமரும்போது யோகம் தருவார். இந்த குரு பெயர்ச்சியால் மிதுன ராசிக்காரர்களுக்கு குரு பத்தாம் வீட்டில் ஆட்சி பெற்று அமர்கிறார். கன்னி ராசிக்காரர்களுக்கு ஏழாம் வீட்டில் ஆட்சி பெற்று அமர்ந்து பார்வையிடுகிறார். இதன்மூலம் ஹம்ச யோகம் கிடைக்கப்போகிறது. கன்னி ராசிக்கு கவலை நீங்கும் கன்னி ராசிக்கு கவலை நீங்கும் கன்னி ராசிக்காரர்களுக்கு நிறைய நல்ல வாய்ப்புகளை தரப்போகிறார் குருபகவான். புதிய வேலை கிடைக்கும். சம்பள உயர்வுடன் கூடிய வேலை கிடைக்கும். வெளிநாட்டு யோகத்தை தரும். எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பரம்பரை சொத்துக்களில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றத்துடன் கூடிய மாற்றங்களை குருபகவான் தரப்போகிறார். பரிகாரம் என்ன பரிகாரம் என்ன குருவினால் தோஷம் ஏற்படும் போது அதற்கேற்ப பரிகாரம் செய்யலாம். ஜாதகத்தில் குரு வலிமை இழந்திருக்கும் நிலையில் நவ கிரகத் தலங்களில் குருவிற்கு முதன்மைத் தலமாக போற்றப்படும் ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் ஆலயம் சென்று அங்கு எழுந்தருளி அருள்பாலிக்கும் தட்சிணாமூர்த்தியை வணங்கலாம். தென் திட்டை ராஜ குருவையும், பாடியில் குரு தலத்திற்கும் சென்று வணங்கலாம். திருச்செந்தூர் குருபரிகார தலம்தான். அங்கு சென்று திருச்செந்தில் ஆண்டவனையும் தட்சிணாமூர்த்தியையும் வணங்கலாம். ஜென்ம நட்சத்திர நாளில் பரிகாரம் செய்வதுதான் நன்மையை தரும்.


No comments