Breaking News

"அஞ்சு ஆட்டுக்குட்டிகளை வச்சுப் பிழைச்சுக்கோங்க"- மாணவியின் தாயை நெகிழ வைத்த ஆசிரியர்கள்!

 ஆசிரியர்கள்

 

மாணவர்களோட சொற்பத் தொகை, ஆசிரியர்களோட பணம் எல்லாத்தையும் சேர்த்து அஞ்சு ஆடுகளை வாங்கி வந்து அவங்க கையில கொடுத்தோம். அவங்களோட முகத்துல அவ்வளவு சந்தோஷம். புதுக்கோட்டை மாவட்டம் குன்றாண்டார்கோவில் அருகே லெக்கணாப்பட்டியில் அரசு உயர்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு ஏழாம் வகுப்பு படித்துவருபவர் சசிகலா. இவரின் தந்தை ஆறுமுகம், 10 ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலக்குறைவால் இறந்துவிட்டார். இதையடுத்து, கடந்த 10 ஆண்டுகளாக கணவனை இழந்த சசிகலாவின் தாய் மாரியாயி சசிகலாவையும், அவரின் தம்பியையும் கூலி வேலை செய்து பல்வேறு சிரமத்துக்கிடையில் வளர்த்துவருகிறார்.

 ஆசிரியர்கள்

 

இந்த நிலையில்தான் லெக்கணாப்பட்டி அரசுப் பள்ளி ஆசிரியர்கள், இந்தக் குடும்பத்தின் வறுமையைப் போக்கவும், வாழ்வாதார உதவியும் செய்யத் திட்டமிட்டனர். அதன்படி, சசிகலாவின் தாயைப் பள்ளிக்கு வரவைத்த ஆசிரியர்கள், அவர் கையில் ஐந்து ஆட்டுக்குட்டிகளைக் கொடுத்து நெகிழ வைத்தனர். மிகுந்த உற்சாகத்துடன் ஆட்டுக்குட்டிகளைப் பெற்றுக்கொண்ட மாரியாயி ஆசிரியர்களுக்கும், மாணவிகளுக்கும் நன்றி தெரிவித்தார்.

No comments