பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 31.03.22 PDF DOWNLOAD
திருக்குறள் :
பால்:பொருட்பால்
இயல்: நட்பியல்
அதிகாரம்: இகல்
குறள் : 860
இகலானாம் இன்னாத எல்லாம் நகலானாம்
நன்னயம் என்னும் செருக்கு
பொருள்:
மனமாறுபாடு
கொண்டு பகையுணர்வைக் காட்டுவோரைத் துன்பங்கள் தொடரும் நட்புணர்வோடு
செயல்படுவோர்க்குப் பெருமகிழ்ச்சி எனும் நற்பயன் விளையும்
பழமொழி :
The worth of the thing is best known by the want
உப்பின் அருமை உப்பில்லாவிட்டால் தெரியும்.
இரண்டொழுக்க பண்புகள் :
1. எல்லாரும் நம்பினாலும் பொய் பொய் தான் ஒருவரும் நம்பாவிட்டாலும் உண்மை உண்மை தான் எனவே எப்போதும் உண்மையே கூறுவேன்.
2.கவனச் சிதறல் என் வாழ்வை கெடுக்கும் எனவே கவனத்தோடு என் காரியங்களைச் செய்வேன்.
பொன்மொழி :
கங்கையில்
குப்பைகளையும் அசுத்தங்களையும் எறிந்தாலும் அதன் பவித்ரம் குறைவதில்லை.
அதுபோல் குருவின் மகிமை மாறுவதில்லை.____ ராமகிருஷ்ண பரமஹம்சர்
பொது அறிவு :
1. கராத்தே பள்ளி முதலில் தோன்றிய நாடு எது?
ஜப்பான்.
2. ஆயிரம் ஏரிகள் உடைய நாடு எது?
பின்லாந்து.
English words & meanings :
Arc - portion of a circle, வட்டத்தின் ஆரம்,
ark - vessel or boat, பேழை படகு
கணினி யுகம் :
Ctrl + [ - Decrease selected font -1.
Ctrl + ] - Increase selected font +1
நீதிக்கதை
கல்வியின் பெருமை
பண்ணையார்
ஒருவர் தன் ஆறு வயது மகனுடன் ஆசிரியரிடம் வந்தார். இவன் என் ஒரே மகன்.
இவனுக்கு நீங்கள் கல்வி கற்றுத்தர வேண்டும். அதற்கு எவ்வளவு பணம்
கேட்கிறீர்கள்? என்றார். அதற்கு ஆசிரியர், நூறு பணம் தாருங்கள். நன்றாக
கல்வி கற்றுத் தருகிறேன். இவன் பேரும், புகழும் பெற்று விளங்குவான் என்றார்
ஆசிரியர்.
ஆ!
இருநூறு பணமா? அந்தப் பணத்திற்கு நல்ல ஒரு எருமை மாடு வாங்கலாமே என்றார்
பண்ணையார். வாங்குங்கள். உங்கள் பண்ணையில் ஐம்பத்து இரண்டு எருமை மாடுகள்
உள்ளன. இப்படி மற்றவரிடம் பெருமையாகச் சொல்லிக் கொள்ளலாம் என்றார்.
ஆசிரியரான
உங்களுக்குக் கணக்கு தெரியாதா? என்னிடம் ஐம்பது மாடுகள் உள்ளன. ஒரு மாடு
சேர்ந்தால், ஐம்பத்து ஒன்று தானே ஆகும். எப்படி ஐம்பத்து இரண்டு வரும்?
மாடுகள் கணக்கில் உங்கள் மகனைச் சேர்க்கவில்லையே அவனையும் சேர்த்தால்
ஐம்பத்து இரண்டு ஆகும்.
என்
மகனை மாடுகள் கணக்கில் சேர்க்க அவன் என்ன மாடா? இப்படி பேச உங்களுக்கு
என்ன துணிச்சல்? என்று கோபத்துடன் கேட்டார் பண்ணையார். கல்வி கற்றவன்
மனிதன். படிக்காதவன் மாடு, மரம் போன்றவன். இது உங்களுக்குத் தெரியாதா?
என்று கேட்டார் ஆசிரியர்.
என்னை
மன்னியுங்கள். கல்வியின் பெருமையை உங்களால் தெரிந்து கொண்டேன். நீங்கள்
கேட்ட பணம் தருகிறேன். இவனுக்கு நன்றாக கல்வி கற்றுத் தாருங்கள். சிறந்த
மனிதனாக இவனை மாற்றுங்கள் என்றார் பண்ணையார். அப்படியே செய்கிறேன் என்றார்
ஆசிரியர்.
நீதி :
மனிதனுக்கு கல்வி அறிவு மிகவும் முக்கியம்.
இன்றைய செய்திகள்
30.03.22
🐣நீர்
மேலாண்மையில் தேசிய அளவில் 3-வது இடம் பிடித்த தமிழகத்திறகு மத்திய
ஜல்சக்தி துறை அமைச்சகத்தின் சார்பில் தேசிய நீர் விருது வழங்கப்பட்டது.
இந்த விருதினை தமிழக நீர்வளத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப்
சக்சேனா பெற்றுக்கொண்டார்.
🐣சென்னை:
தமிழகத்தில் பள்ளி,கல்லூரிகளுக்கு அருகே கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள்
விற்பனை செய்யப்படுவதை உடனடியாக தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று
காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.
🐣2 நாள் பாரத் பந்த் | போக்குவரத்து, வங்கி சேவை பாதிப்பு: மக்கள் கடும் அவதி.
🐣அஸ்ஸாம்-
மேகாலயா இடையே 50 ஆண்டுகளாக நிலவி வரும் எல்லை பிரச்சினைக்கு தீர்வு
காணும் வரலாற்று சிறப்பு மிக்க ஒப்பந்தம் கையெழுத்தானது.
🐣விமானக் கட்டணம் திடீர் உயர்வு: கண்காணிக்க மத்திய அரசு நடவடிக்கை.
🐣உக்ரைனை
முழுமையாக கைப்பற்ற வாய்ப்பு இல்லாத நிலையில் ரஷ்ய அதிபர் புதின் புதிய
வியூகம் வகுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வடகொரியா, தென்கொரியா போன்று
உக்ரைனை இரு துண்டாக பிரிக்க ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக தகவல்
வெளியாகியுள்ளது.
🐣கொல்கத்தாவில்
நடைபெற்ற அகில இந்திய ரெயில்வே நீச்சல் போட்டியில் தென்னக ரெயில்வே
வீரர்கள் 15 வருடங்களுக்கு பிறகு பதக்கம் வென்று சாதனை படைத்தனர்.
🐣'பார்முலா 1' கார் பந்தயத்தில் நெதர்லாந்து வீரர் வெர்ஸ்டப்பென் வெற்றி இலக்கை கடந்து முதலிடத்தை பிடித்தார்.
Today's Headlines
🐣National
Water Award was given to Tamil Nadu which is ranked 3rd nationally in
water management on behalf of the Central Ministry of Water Resources.
The award was received by Sandeep Saxena, Additional Chief Secretary,
Government of Tamil Nadu Water Resources.
🐣Chennai: DGP Silenthrababu has directed the top police officials to
take immediate action to stop the sale of drugs including cannabis near
schools and colleges in Tamil Nadu.
🐣2 Day Bharat Bandh | Impact on transport and banking services: People are suffering.
🐣Assessful signing of historic agreement between Assam and Meghalaya to resolve 50 years of border dispute.
🐣Sudden increase in air fares: Federal action to monitor.
🐣
It has been reported that Russian President Vladimir Putin has devised a
new strategy in the absence of a chance to fully occupy Ukraine. It
has been reported that Russia is planning to divide Ukraine into two
parts, like North Korea and South Korea.
🐣 The Southern Railway won the medal after 15 years at the All India Railway Swimming Championships in Kolkata.
🐣 In the Formula 1 car race, the Dutchman Verstappen crossed the finish line and took first place.
Prepared by
Covai women ICT_போதிமரம்
No comments