Breaking News

ஒரு நாள் தலைமை ஆசிரியரான 1ம் வகுப்பு மாணவி - நேர்மைக்கு கிடைத்த பாராட்டு:

முதலமைச்சர் பதவியில் ஒரு நாள் மட்டும் அமர்ந்த அர்ஜூனை முதல்வன் படத்தில் பார்த்திருக்கிறோம். இது போல் ஒரு நாள் காவல்துறை ஆணையராக சிறார்கள் இருந்த சம்பவமும் ஆங்காங்கே நடந்ததுண்டு. ஆனால் முற்றிலும் வித்தியாசமாக தீப பிரபா என்னும் சின்னஞ்சிறு மாணவி, தனது நேர்மை காரணாக தனது பள்ளிக்கே ஒரு நாள் தலைமை ஆசிரியையாக இருந்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பர்மா காலனி ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் 1 ஆம் வகுப்பு படிப்பவர் தீப பிரபா. இவர் சியோன் நகரை சேர்ந்த கார்மேக கண்ணன் என்பவரின் மகளாவார். இவர் நேற்று காலை பள்ளி வகுப்பறைக்கு வந்துள்ளார் அங்கு 50ருபாய் கிடந்துள்ளது. அதனை எடுத்து வைத்துள்ளார். பின்னார் ஆசிரியர் ராமலட்சுமி வந்தவுடன் அந்த 50ருபாய் பணத்தை அவரிடம் கொடுத்துள்ளார்.  அப்போது தான், ஆசிரியருக்கே, முன்தினம் மாலை 50 ருபாய்யை தான் தவறவிட்டது தெரிந்துள்ளது.

மாணவியை வகுப்பறையில் வைத்து பாராட்டிய ஆசிரியர், அந்த மாணவியை மற்ற வகுப்பிற்கும் கூட்டிச் சென்று, மாணவியின் நேர்மையை மாணவ-மாணவிகள் மத்தியில் பேசி பாராட்டி, மாணவர்களின் கை தட்டலை அந்த மாணவிக்கு ஊக்கப்பரிசாக பெற்றுத் தந்துள்ளார்.

பின்னர், தலைமை ஆசிரியர் ஞானசேகரிடம் கூட்டி சென்று மாணவியின் செயலை சொல்லி உள்ளார். உடனடியாக தலைமை ஆசிரியரும் மாணவியை பாராட்டி, இந்த மாணவிக்கு உயர்ந்த பரிசு தர வேண்டும் என்று எண்ணியுள்ளார். பின்னர், தலைமை ஆசிரியர் ஞானசேகர் தனக்கு கொடுக்கப்பட்ட பொறுப்பை அந்த மாணவிக்கு கொடுத்து, ஒரு நாள் முழுவதும்  தலைமை ஆசிரியர் பணிகளை கொடுத்து அவரை கெளரவபடுத்தினார்.பின்னர், தலைமை ஆசிரியர் பணிகள் என்னென்ன என்று சொல்லிக் கொடுத்து, மானவியின் செயலை மாணவர்கள் முன்னிலையில் பாராட்டினார். இவரை போல் எல்லோரும் நேர்மையாக இருக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.  இந்த வயதில் மாணவியின் செயல் அனைத்து மாணவர்களுக்கும் முன்னுதாரணமாகத் திகழ்கின்றது.அனாதையாகக் கிடந்த 50 ரூபாய் நோட்டை எடுத்து, மிட்டாய் வாங்கித் திண்ணலாம் எனக் சட்டைப்பைக்குள் வைக்காமல் ஆசிரியை வந்ததும் அவரிடம் ஒப்படைத்தார் தீப பிரபாவின் நேர்மைக்கு உரிய பாராட்டு கிடைத்துள்ளது.

No comments