பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 05.04.22 Download PDF:
திருக்குறள் :
பால்: பொருட்பால்
,
:இயல் :நட்பியல்,
அதிகாரம் :பகைமாட்சி, குறள் :866, காணாச் சினத்தான் கழிபெருங் காமத்தான்
பேணாமை பேணப் படும்.
பொருள்
சிந்திக்காமலே சினம் கொள்பனாகவும், பேராசைக்காரனாகவும் இருப்பவனின் பகையை ஏற்று எதிர் கொள்ளலாம்.
பேணாமை பேணப் படும்.
பொருள்
சிந்திக்காமலே சினம் கொள்பனாகவும், பேராசைக்காரனாகவும் இருப்பவனின் பகையை ஏற்று எதிர் கொள்ளலாம்.
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 05.04.22 Download PDF: Click Here
பழமொழி :
A rolling stone gathers no moss
அலைபாயும் மனத்தால் எதையும் செய்ய முடியாது.
இரண்டொழுக்க பண்புகள் :
1. எனது நடை, ஆடை மற்றும் ஒழுக்கத்தின் மூலம் நான் ஒரு மதிப்பு மிகு மாணவன் என்பதை மற்றவர்க்கு உணர்த்துவேன்.
2. ஆசிரியர்கள் பெற்றோரிடம் மரியாதை மற்றும் கீழ் படிதல் ஆக நடந்து கொள்வேன்.
பொன்மொழி :
ஒரு குழந்தையின் வாழ்க்கை ஒவ்வொரு நபரும் ஒரு அடையாளத்தை விட்டுச்செல்லும் ஒரு துண்டு காகிதத்தைப் போன்றது____ சீனப் பழமொழி
பொது அறிவு :
1. உலகத்தில் எந்த நாடு அதிக அளவில் ரப்பர் உற்பத்தி செய்கிறது?
மலேசியா
2. ஹீமோகுளோபினில் உள்ள உலோகம் எது?
இரும்பு
English words & meanings :
Bio degradable - can be decomposed, உயிரின சிதைவிற்கு உள்ளாகும் பொருள்,
bio - fuel - fuel obtained from living things, உயிரி எரி பொருள்
ஆரோக்ய வாழ்வு :
தேங்காயில் உள்ள மருத்துவ குணங்கள் புரதச் சத்து, மாவுச்சத்து, கால்சியம், இரும்பு உள்ளிட்ட தாது பொருட்கள், வைட்டமின் சி, அனைத்து வகை பி காம்ப்ளக்ஸ் சத்துக்கள், நார்ச்சத்து இயக்கத்துக்கு தேவைப்படும் அனைத்துச் சத்துகளும் தேங்காயில் உள்ளன. தேங்காய்ப் பால் உடல் வன்மைக்கு நல்லது. தேமல், படை, சிரங்கு போன்ற நோய்களுக்குத் தயாரிக்கப்படும் மருந்துகளில் பெருமளவு தேங்காய் எண்ணெய் சேர்க்கப்படுகிறது. தேங்காய்ப்பாலில் கசகசா, பால், தேன் கலந்து கொடுத்தால் வறட்டு இருமல் மட்டுப்படும். தேங்காய்ப் பாலில் காரத்தன்மை உள்ளதால், அதிக அமிலம் காரணமாக ஏற்படும் வயிற்றுப் புண்களுக்கு தேங்காய் பால் மிகவும் சிறந்தது. இவை உடலின் வளர்சிதை மாற்றத்திற்கு பெரிதும் உதவுகிறது.
கணினி யுகம் :
F7 - Spell check selected text.
F11 - Create a chart
நீதிக்கதை
என் அடிமைகளுக்கு நீ அடிமை
மாவீரன்
அலெக்ஸாண்டர் இந்தியாவை வென்று வரக் கிளம்பினான். அப்போது அவன் மனைவி
தனக்கு இந்தியாவில் இருந்து ஒரு முனிவரைப் பரிசாகக் கொண்டு வரும்படி
கேட்டுக் கொண்டாள். அவளுக்கு முனிவர்களிடம் பெரிய மரியாதை. முனிவர்கள்
அடுத்த பிறவியில் என்ன நடக்கும் என்று தெளிவாகக் கூற வல்லவர்கள் என்றும்
அவள் நம்பினாள்.
அலெக்ஸாண்டர்
இந்தியா வந்தான். வேலை முடிந்து வீடு திரும்பப் போகும் முன்னர் மனைவி
விரும்பிய பரிசு அவனுக்கு நினைவுக்கு வந்தது. உடனே ஒரு பழுத்த முனிவரைத்
தேடிக் கண்டு பிடித்தான். அவரை தன்னுடன் வரும்படி ஆணையிட்டான்.
முனிவர்
மறுத்து விட்டு தன் வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தார். அலெக்ஸாண்டரை இது
வரை யாரும் இப்படி அலட்சியப்படுத்தியதில்லை. அவனுக்குத் தலைக்கு மேல்
கோபம் வந்தது. வாளை உருவிக்கொண்டு அவரை நோக்கிப் பாய்ந்தான்.
முனிவரோ
அலட்டிக் கொள்ளாமல் அவனைப் பார்த்துப் புன்சிரித்தார். அலெக்ஸாண்டருக்கு
இது பெரும் வியப்பாக இருந்தது. முனிவரைப் பார்த்து கொல்ல வரும் நபரைப்
பார்த்து சிரிக்கிறீரே! உமக்குப் பைத்தியமா? என்று கேட்டான்.
அதற்கு
முனிவர் மன்னா... நீ இரண்டு விஷயங்களைத் தெளிவாகப் புரிந்து கொள்ள
வேண்டும். முதலில் உன்னால் என் உடம்பை வேண்டுமானால் வெட்டிப் போட முடியுமே
தவிர, என்னை அழிக்க உன்னால் இயலாது. இரண்டாவது, என்னுடைய இரண்டு
அடிமைகளுக்கு நீ அடிமையாக இருக்கிறாய் என்று பார்க்கும்போது எனக்குச்
சிரிப்புதான் வருகிறது! என்றார்.
அலெக்ஸாண்டருக்குப்
புரியவில்லை. நான் உலகத்திற்கே அரசன். மாவீரன். நான் எப்படி அடிமையாக
முடியும்? என்று முனிவரிடம் கேட்டான். அவர் அப்பா! கோபமும் ஆசையும் எனக்கு
அடிமைகள். நீ அவை இரண்டிற்கும் அடிமையாகக் கிடக்கிறாய். அதைத்தான் நான்
சொன்னேன் என்றார். மன்னருக்கு இப்போது விளங்கி விட்டது! முனிவரை வணங்கி
விட்டுத் தன் வழியே போய் விட்டான்.
இன்றைய செய்திகள்
05.04.22
திருச்செந்தூர்:
திருச்செந்தூரில் கடல் நீர் 100 மீட்டர் தூரம் உள்வாங்கியது. இதனால்
கடலில் உள்ள சிறிய பாறைகள், மணல் திட்டுகள் தெரிந்தது.
🌸சென்னை:
தமிழ்நாட்டில் வளர்ந்துள்ள சீமை கருவேல மரங்களில் 700 ஹெக்டேர் பரப்பளவு
அடையாளம் காணப்பட்டு வெட்டும் பணி தொடங்கிவிட்டதாக உயர்நீதிமன்றத்தில்
தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
🌸சென்னை:
காவல் உதவி செயலியை மக்கள் பயன்பாட்டிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின்
அர்ப்பணித்தார். அவசரகால அலைபேசி அழைப்பு வசதி டயல் 112, 100, 101 ஆகிய
எண்கள் மூலம் பயனாளர்கள் அலைபேசியில் நேரடி புகார்களை தெரிவிக்கும்
பொருட்டு டயல் 100 செயலியானது காவல் உதவி செயலியின் மூலம்
ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.
🌸இம்பால்:
மணிப்பூர் மாநிலம் இம்பால் அருகே உள்ள ஒரு சிறிய கிராமத்தில்
அமைந்திருக்கும் பள்ளியில், தனது சகோதரியை மடியில் வைத்துக் கொண்டு
பாடங்களை கவனித்து எழுதிக் கொண்டிருக்கும் சிறுமியின் புகைப்படம்
பார்ப்போரை நெகிழ்ச்சிக்குள்ளாக்குகிறது.
Today's Headlines
Thiruchendur: Seawater infiltrated 100 meters in Thiruchendur. Thus the small rocks and sand dunes in the sea became visible.
Chennai:
The Tamil Nadu government has informed the High Court that 700 hectares
of sessile oak trees growing in Tamil Nadu have been identified and the
cutting work will start soon.
Chennai:
Chief Minister MK Stalin has initiated the Kaval Uthavi App for public
use. Through Emergency Mobile Call Facility Dial numbers 112, 100 and
101 users can directly complain for that 100 is sync with Kaval Uthavi
App.
Imbal: At a school
in a small village near Imphal, Manipur, a photo of a little girl
holding her sister in her lap and writing lessons touched the heart of
many viewers.
Prepared by
Covai women ICT_போதிமரம்
No comments