கடைசி நிமிடத்தில் நுழைவுத் தேர்வு தேதி மாற்றம்!!
நாட்டில் உள்ள மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை மாணவர் சேர்க்கைக்கு நடத்தப்படும் பொது நுழைவுத் தேர்வுக்கான (CUET) விண்ணப்ப செயல்முறை வரும் 6ஆம் தேதி முதல் தொடங்குகிறது.
முன்னதாக, இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பங்கள் பெறப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், தற்போது 6ஆம் தேதிக்கு மாற்றப்ப்பட்டுள்ளது.
இதற்கான விண்ணப்பங்களை, தேசிய தேர்வு முகமையின் cuet.samarth.ac.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் மட்டும் சமர்ப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி மே மாதம் 6ஆம் தேதி என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2022-23 கல்வியாண்டில் நாடு முழுவதும் மத்திய கல்வி அமைச்சகத்தின் உயர்கல்வித் துறையின் கீழ் மத்திய பல்கலைக்கழகங்கள் செயல்படுகின்றன. இந்த பல்கலைக்கழகங்களில் இளங்கலை மாணவர் சேர்க்கைக்கு தேசிய அளவில் பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்று பலகலைக்கழக மானியக் குழு முன்னதாக தெரிவித்தது.
மேலும், ஆர்வம் உள்ள நிகர்நிலை பல்கலைக்கழகங்கள், மாநில பல்கலைக்கழகங்கள், தனியார் உயர்கல்வி நிறுவனங்கள் ஆகியவையும் இதில் இணைந்து கொள்ளலாம் என்றும் கூறியது குறிப்பிடத்தக்கது.
No comments