மாணவர்களே, இந்த படிப்பில் சேரணுமா..?: அப்போ, உடனே அப்ளை பண்ணுங்க..!
சுயநிதி மருத்துவக்கல்லூரிகளில் நிர்வாக
ஒதுக்கீட்டில் உள்ள சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட படிப்புகளில் சேர
விரும்பும் மாணவர்கள் வரும் 8-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
சுயநிதி மருத்துவக்கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டில் உள்ள சித்தா,
ஆயுர்வேதம் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் பட்டப் படிப்புக்கு வரும் 18-ம்
தேதி நேரடி கவுன்சிலிங் நடக்க உள்ளது.
‘நீட்’ தேர்வில் தேர்ச்சி
பெற்ற மாணவர்கள் 1,000 ரூபாய் கட்டணம் செலுத்தி, வரும் 8-ம் தேதிக்குள்
விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு முந்தைய கவுன்சிலிங்கில் தாமதமாக
விண்ணப்பித்தோர் மற்றும் விண்ணப்பிக்கத் தவறியோர் இந்த முறை
விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்த மேலும் விவரங்களை https://www.tnhealth.tn.gov.in என்ற
இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும், மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகம்
மாணவர் சேர்க்கைக்கான நீட் மதிப்பெண்களை குறைத்துள்ளது.
இதன்படி,
ஓ.சி. பிரிவினருக்கு 137 முதல் 122 வரையிலும், ஓ.பி.சி. - எஸ்.சி. -
எஸ்.டி. பிரிவினருக்கு 121 முதல் 96 வரையிலும் கட் ஆப் மதிப்பெண்
குறைக்கப்பட்டுள்ளது.
No comments