Breaking News

இனி பொறியியல் படிப்புகளில் சேர கணித பாடம் அவசியமில்லை.. ஏஐசிடிஇ அறிவிப்பு

 மாதிரிப்படம்

பொறியியலில் 3 படிப்புகளில் சேர 12ம் வகுப்பில் கட்டாயம் கணித பாடம் படித்திருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்குழு (AICTE) தெரிவித்துள்ளது.

பொறியியல் படிப்பில் சேர்ந்து படிப்பது பல மாணவர்களுக்கு லட்சியமாக இருந்தாலும், 12ம் வகுப்பில் கணிதப் பாடம் கட்டாயம் என்ற விதிமுறை, பலருக்கு இடையூறாக இருந்து வந்தது.

அதுபோன்றவர்களுக்கு சற்று ஆறுதல் தரும் இந்நிலையில் 2022-23ம் கல்வியாண்டுக்கான புதிய விதிமுறைகளை அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்குழு வெளியிட்டிருக்கிறது. அதில், பொறியில் பிரிவில் உள்ள மூன்றில் ஒரு பங்கு படிப்புகளில் சேருவதற்கு கணிதம் கட்டாயமில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இளங்கலை பொறியியலில் ஆர்கிடெக்சர், ஃபேஷன் டெக்னாலஜி, பேக்கேஜிங் டெக்னாலஜி ஆகிய படிப்புகளுக்கு, 12ம் வகுப்பில் கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங்கள் படித்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் 12ம் வகுப்பில் கம்ப்யூட்டர் சயின்ஸ், எலக்ட்ரானிக்ஸ், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, பயோடெக்னாலஜி உள்ளிட்ட 14 பாடங்களை படித்த மாணவர்கள், பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

இதேபோல் கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு, பி.எம்.கேர்ஸ் சான்றிதழ் அடிப்படையில், ஒவ்வொரு படிப்பிலும் 2 இடங்கள் ஒதுக்கப்படும் என அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்குழு அறிவித்துள்ளது.

No comments