தேநீர் பிரியர்களுக்கு பெரும் அதிர்ச்சி தரும் செய்தி !!
கோடை வெயில் தொடங்கி மக்களை வாட்டிவருகிறது. ஆனால் அதனை விட, எரிபொருள் விலைவாசி உயர்வும், உணவுபொருள் விலையேற்றமும் பொதுமக்களை மேலும் வறுத்தெடுத்து வருகிறது. இந்த மாதத்தில் வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை கடுமையாக உயர்ந்தது. அதேபோல், பெட்ரோல், டிசல் விலை மீண்டும் படிப்படியாக உயர்ந்து வருகிறது.இதன் காரணமாக சென்னையில் தேநீர் கடைகளில் தேநீர் மற்றும் காபியின் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளன. சாலையோரம் செயல்படும் தேநீர் கடைகளில் ஒரு தேநீர் விலை 10 ரூபாயிலிருந்து ரூ.12 என்ற அளவுக்கும், காபியின் விலை ரூ.12லிருந்து ரூ.15 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இறுதியாக கடந்த 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தேநீர், காபியின் விலைகள் உயர்த்தப்பட்டன்.
சென்னையில் மாநகராட்சியில் மட்டும் சுமார் 3,500 தேநீர் கடைகள் உள்ளன. இந்தக் கடைகளில் நாள் ஒன்றுக்கு 3 முதல் 15 லிட்டர் பால் பயன்படுத்தப்படுகிறது. இதுதவிர, சிறிய மற்றும் நடுத்தரமாக ஏராளமான உணவகங்களிலும் தேநீர், காபி விற்பனையாகிறது.
கடந்த 2019ஆம் ஆண்டு இதன் விலை ரூ.1,200 ஆக இருந்தது. தற்போது ரூ.2,250 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதுபோல கொழுப்பு நிறைந்த பால் லிட்டரூக்கு ரூ.54லிருந்து தற்போது ரூ.55 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு பெட்டிக் கடையில் தேநீர் விற்றால்தான், அங்கு வாடிக்கையாளர் 8 - 10 நமிடங்கள் வரை நிற்பார். அப்போதுதான் கடையில் வைத்திருக்கும் மற்ற சில பொருள்களும் விற்பனையாகும். ஆனால், இந்த தேநீர் விற்பதே தற்போது சவாலாக இருப்பதாக கூறுகின்றனர்.
No comments