இது தெரியமா போச்சே..! போஸ்ட் ஆபீஸ்-ல் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும்?
இந்தியாவில் நம்பகமான முதலீட்டு திட்டங்கள் என்றாலே நாம் கண்ணை மூடிக்கொண்டு அஞ்சலகத் திட்டங்களில் முதலீடு செய்து விடலாம்.
ஏனெனில் வங்கிகளை விட அதிக வட்டி தரக்கூடியது மட்டுமல்ல , நமது பணத்தையும்
பாதுகாப்பாக திரும்ப வழங்க கூடியவை தான் அஞ்சல் நிலைய முதலீட்டு
திட்டங்கள்.அஞ்சல் அலுவலகங்களில் கிஷான் விகாஸ் பத்திரம், தேசிய சேமிப்பு
திட்டம் மற்றும் மகிளா சம்மன் சேமிப்பு பத்திரம் ஆகிய மூன்று திட்டங்கள்
கிடைக்கின்றன. இந்த திட்டங்களை பொறுத்தவரை நாம் செய்யும் முதலீடுகளுக்கு
7.5 முதல் 7.7 % வரை வட்டி வழங்கப்படுகிறது. எனவே பெரும்பாலானவர்களின்
விருப்பமான முதலீட்டு திட்டங்களாக இவை இருக்கின்றன.இதன்படி தேசிய சேமிப்பு
பத்திரத்திற்கு 7.7% வட்டி வழங்கப்படுகிறது. கிசான் விகாஸ் பத்திரம்
மற்றும் மகிளா சம்மன் திட்டங்களுக்கு 7.5% வட்டி கிடைக்கிறது. இதில் இந்த
மூன்று திட்டங்களிலுமே குறைந்தபட்சம் 1,000 ரூபாயிலிருந்து முதலீட்டினை
தொடங்கலாம்.
இதில் தேசிய சேமிப்பு பத்திரம் மற்றும் கிசான் விகாஸ் பத்திரம் திட்டங்களில் மட்டும் அதிகபட்ச முதலீட்டு வரம்பு கிடையாது . மகிளா சம்மன் திட்டத்தை பொறுத்தவரை 2 லட்சம் ரூபாய்க்கு மேல் முதலீடு செய்ய முடியாது.தேசிய சேமிப்பு பத்திரம் திட்டத்தின் முதிர்வு காலம் 5 ஆண்டுகள், கிசான் விகாஸ் திட்டத்தில் முதிர்வு காலம் 115 மாதங்கள், மகிளா சம்மன் திட்டத்தை பொறுத்தவரை முதிர்வு காலம் 2 ஆண்டுகள் ஆகும். இந்தத் திட்டங்களில் எல்லாம் நாம் ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் நமக்கு எவ்வளவு கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.தேசிய சேமிப்பு பத்திரம் திட்டத்தை பொறுத்தவரை நாம் 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்தோம் என்றால் தற்போது கிடைக்கக்கூடிய வட்டி விகிதம் மற்றும் காம்பவுண்டிங் திறன் ஆகியவற்றை கொண்டு கணக்கீடு செய்யும் போது நம்முடைய 1 லட்சம் ரூபாய் 5 ஆண்டுகள் முடிவில் 1, 44, 903 ரூபாயாக நமக்கு கிடைக்கும்.கிசான் விகாஸ் பத்திரம் திட்டத்தில் நாம் 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் நமக்கு 115 மாதங்கள் அதாவது 9 ஆண்டுகள் 7 மாதங்களில் நம்முடைய பணம் இரட்டிப்பாகி 2 லட்சம் ரூபாயாக கிடைக்கும். மகிளா சம்மன் திட்டத்தில் நாம் 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் இரண்டு ஆண்டுகளின் முடிவில் நமக்கு 1,16,022 ரூபாயாக திரும்ப கிடைக்கும்

No comments