Breaking News

காலையில் வெறும் வயிற்றில் பப்பாளி எடுத்துக் கொண்டால் உடலில் இத்தனை மாற்றங்கள் உண்டாகும்!!

 

காலையில் வெறும் வயிற்றில் பப்பாளி எடுத்துக் கொண்டால் உடலில் இத்தனை மாற்றங்கள் உண்டாகும்!!

பழங்களில் பல சத்துக்கள் நிறைந்த பப்பாளி பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் நம்முடைய உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கின்றது.

பப்பாளியில் உடலுக்குத் தேவையான சத்துக்களும், சருமத்திற்கு தேவையான சத்துக்களும் இருக்கின்றது.

பப்பாளியை நாம் முகத்திற்கு தேய்த்து வந்தால் சருமத்தின் அனைத்து பிரச்சனைகளும் சரியாகும். இந்த பப்பாளியில் விட்டமின் சத்துக்களும், இரும்பு சத்தும் மற்றும் பல ஊட்டச்சத்துக்களும் இருக்கின்றது.

வெப்ப மண்டல பழமான பப்பாளியை மருத்துவர்கள் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும் என்று கூறுகின்றனர். பப்பாளி பழத்தை ஏன் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும் என்பது குறித்து தற்பொழுது பார்க்கலாம்.

வெறும் வயிற்றில் பப்பாளியை சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்…

* பப்பாளியை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கின்றது. இதனால் எந்த நீயும் நம்மை எளிதில் அண்டாது.

* செரிமான பிரச்சனைகள் இருப்பவர்கள் பப்பாளியை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் போதும். அஜீரணம் போன்ற செரிமான பிரச்சனைகள் அனைத்தும் குணமடையும்.

* நாம் பப்பாளியை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் நம்முடைய உடலில் இருக்கும் அதிகமான அமிலத் தன்மையை குறைக்கின்றது.

* சர்க்கரை நோய் இருப்பவர்கள் வெறும் வயிற்றில் பப்பாளியை சாப்பிடலாம். இதனால் அவர்களுடைய இரத்த சர்க்கரை அளவை சீராக வைத்துக் கொள்ள உதவுகின்றது.

* பப்பாளியை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் இதய நோய் ஏற்படும் அபாயத்தை குறைக்கின்றது. இதய நோய் இருப்பவர்களும் பப்பாளியை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் இதயம் பலம் பெறும்.

* பப்பாளியை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் நமக்கு பக்கவாதம் ஏற்படுவதை தடுக்கலாம்.

* நாம் பப்பாளியை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் சரும ஆரோக்கியம் அதிகரிக்கின்றது.

No comments