Breaking News

செல்போனில் அடிக்கடி விளம்பரங்கள் வருகிறதா? இதை மட்டும் ஆப் செய்தால் போதும்.!

 


செல்போனால், உலகமே நம் உள்ளங்கையில் அடங்கிவிடுகிறது. இதன் மூலம் பெரும்பாலான வேலைகளை நம்மால் எளிதில் முடித்துவிட முடியும்.

ஆனால், சில முக்கியமான நேரங்களில் நம் செல்போன் திரையில் தோன்றும் விளம்பரங்களால் நமக்கு சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது.

இதனை தவிர்க்க கூடிய அம்சங்கள் உள்ளன. இதன் மூலம் நம் மொபைல் போனுக்கு வரும் விளம்பரங்களை கட்டுப்படுத்த முடியும். அதுகுறித்து இந்தப் பதிவில் காண்போம்.

* முதலில் செல்போனில் செட்டிங்க்ஸ்-ஐ கிளிக் செய்து கூகுள் செயலியை தொட வேண்டும்.

* அதில் Manage Google account என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.

* Data and Privacy என்ற ஆப்ஷன் திரையில் தோன்றும்.

* அதை ஸ்க்ரால் செய்தால் Personalized Ads என்று தோன்றும். அதற்கு கீழே இருக்கும் My ad center என்பதை கிளிக் செய்து Personalized Ads-ஐ டர்ன் ஆஃப் செய்ய வேண்டும்.

* பின்னர் மீண்டும் Settings-க்கு சென்று கூகுளை கிளிக் செய்ய வேண்டும். பின்னர், Ads என்பதை கிளிக் செய்ய வேண்டும். இதையடுத்து, Delete Advertising ID என்பதை கிளிக் செய்து நீக்க வேண்டும். அவ்வளவு தான் இனிமேல் நீங்கள் செல்போன் பார்க்கும் போது விளம்பரங்கள் எதுவும் வராது.

No comments