Breaking News

பட்டா மாறுதல்.. வாரிசுகள் பெயரில் பட்டா மாற்றணுமா? பாகப்பிரிவினை செய்யணுமா? இதோ சூப்பர் வழியிருக்கே

 


பட்டா மாறுதல் செய்ய வேண்டுமானால், ஆன்லைனில் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் என்னென்ன? தெரியுமா? தந்தை அல்லது தாய் இறந்து விட்டால், அவர்களில் பெயரிலுள்ள பட்டாவை எப்படி மாற்றுவது தெரியுமா?

தந்தை மற்றும் தாய் இருவருமே இறந்துவிடடால், எப்படி பட்டா மாற்றுவது?

பட்டா என்பது சொந்தமாக வீடு அல்லது நிலம் வைத்திருப்பவர்களுக்கான ஆவணமாகும். நிலத்தின் உரிமையை சுட்டிக்காட்டும் இந்த ஆவணத்தை, வருவாய் துறை வழங்கும். நிலத்தின் உரிமையாளர் பெயர், சர்வே எண், நில வகை, நிலம் அமைந்துள்ள பகுதி போன்ற விவரங்கள் பட்டாவில் இருக்கும்.

பட்டா மாறுதல் செய்ய வேண்டுமானால், பட்டா மாறுதலுக்கான விண்ணப்பங்களை உரிமையாளர்கள் பொது சேவை மையங்கள் மற்றும் சார்பதிவாளர் அலுவலகம் வாயிலாக விண்ணப்பித்து, அவை ஆன்லைனில் பரிசீலிக்கப்பட்டு, அதற்கு பிறகே பட்டா மாறுதலுக்கான ஆணைகள் வழங்கப்படும்.

ஆன்லைன் பட்டா: ஆனால் ஆன்லைனிலே இந்த பட்டா மாறுதலை மேற்கொள்ளும்போது, கால விரயம் குறைகிறது.. பட்டா மாறுதலும் உடனடியாக நடக்கிறது.. இப்படியொரு சூப்பர் இணையவழி சேவையை, நமது தமிழக முதல்வர் ஸ்டாலின், "எங்கிருந்தும் எந்நேரத்திலும்" என்ற வெப்சைட் மூலம் துவக்கி வைத்திருக்கிறார்.. இதன்மூலும் எங்கிருந்தும் பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிக்கும் வசதியை நம்மால் பெற்றுக் கொள்ள முடியும். பட்டா மாறுதல் கோரி https://tamilnilam.tn.gov.in/citizen/என்ற இணைய வழியில் விண்ணப்பிக்கலாம்.

கிரையப் பத்திரம், செட்டில்மெண்ட் பத்திரம், பாகப்பிரிவினை பத்திரம், தானப்பத்திரம், பரிவர்த்தணை பத்திரம், விடுதலை பத்திரம், போன்ற பத்திரங்களில் ஏதாவது ஒன்று கட்டாயம் தேவைப்படும்..

ஆவணங்கள்: அதாவது, நீங்கள் எந்த சொத்தை பட்டா மாற்ற வேண்டுமோ அந்த சொத்தினுடைய ஆவணம், அதாவது சொத்து பாத்திரம் (Registration Document). கட்டாயம் தேவைப்படும்.. பட்டா மாற்றம் செய்ய இருக்கும் சொத்தினுடைய தாய் பத்திரமும் வேண்டும். இந்த சொத்தினுடைய கணினி சிட்டா மற்றும் வில்லங்க சான்றிதழும் தேவைப்படும்.

அதேபோல, ஆதார் அட்டை, பான் அட்டை, ஓட்டுனர் உரிமம், ரேஷன் அட்டை, பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை குடியிருப்பு ஆவணங்களில் ஏதாவது ஒன்று கண்டிப்பாக தேவைப்படும்.. இதைத்ததவிர, ஆதார் அட்டை, தொலைப்பேசி ரசீது, மின் கட்டணம், சமையல் எரிவாயு ரசீது, பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை இதெல்லாம் இருந்தாலே பட்டா மாறுதல் எளிதில் செய்யலாம்.

எப்படி மாற்றுவது:

- பட்டா மாறுதல் செய்யப்பட வேண்டியது "உட்பிரிவற்ற பட்டா மாறுதல் அல்லது உட்பிரிவுடன் கூடிய பட்டா மாறுதல்" இதில், ஏதாவது ஒரு ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்.

- உங்களது சுயவிவரங்களையும், நிலத்தின் விவரங்களையும் பதிவிட வேண்டும். குறிப்பாக, எந்த மாவட்டம், தாலுகா, கிராமம், சர்வே நம்பர் மற்றும் சப்-டிவிஷன் நம்பர் போன்றவற்றை பதிவிட வேண்டும்.

- பிறகு, சம்பந்தப்பட்ட நிலம் உங்களுக்கு சொந்தமானதற்கு என்ற சான்றான, கிரைய பத்திரம் உள்பட ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். இறுதியாக, உட்பிரிவற்ற பட்டா மாறுதலுக்கு வரிகள் இல்லாமல் ரூ.60-ம், உட்பிரிவுடன் கூடிய பட்டா மாறுதலுக்கு ரூ.460-ம் கட்டணம் செலுத்த வேண்டும்.

- உங்களது விண்ணப்பம் சம்பந்தப்பட்ட தாசில்தாருக்கு அனுப்பப்படும்... அவர் மூலம் கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர் ஆகியோரிடம் விசாரணை நடத்தி பட்டா மாறுதல் செய்யப்படும்.

கூட்டுப்பட்டா: தந்தை அல்லது இறந்து விட்டால் அவர்களில் பெயரில் உள்ள பட்டாவை, வாரிசு சான்றிதழ் வைத்து வாரிசுகள் பெயரில் கூட்டு பட்டாவாக மாற்றி கொள்ளலாம். தந்தை (அ) தாய் இறந்து விட்டால் அவர்களில் பெயரில் உள்ள பட்டாவை வைத்து, பாகப்பிரிவினை செய்வதன் மூலம் வாரிசுகள் தனித்தனியாக அவரவர் பெயரில் பட்டாவை எளிதாக மாற்றி கொள்ளலாம்.

அதேபோல, தந்தை (அ) தாய் இறந்து விட்டால் அவர்களில் பெயரில் உள்ள பட்டாவை, வாரிசு சான்றிதழ் வைத்து வாரிசுகள் பெயரில் கூட்டு பட்டாவாக மாற்றி கொள்ளலாம். உதாரணத்துக்கு ஒருவரது அப்பா இறந்துவிட்டதாக வைத்து கொள்வோம். இதனை வாரிசுக்கு பட்டா மாற்றம் செய்ய வேண்டுமானால், அப்பா பெயரிலுள்ள பட்டா , அப்பாவின் இறப்பு சான்றிதழ், வாரிசு சான்றிதழ் இதெல்லாம் ஆவணமாக தேவைப்படும்.

பாகப்பிரிவினை: அம்மா இறந்துவிட்டால், அவரது இறப்பு சான்றிதழ், வாரிசு சான்றிதழ் போன்றவை தேவைப்படும். இந்த ஆவணங்களுடன், அருகிலுள்ள அரசு இ சேவை மையம் அல்லது கிராம நிர்வாக அலுவலகம் சென்று விண்ணப்பம் செய்தாலே போதும். இதற்கு 60 ரூபாய் செலவாகும்... பாகப்பிரிவினை பத்திரத்தை கொண்டு வாரிசுகள் தனித்தனியாக பட்டாக்களை, அவரவர் பெயரில் விண்ணப்பித்து, அவரவர் பெயரிலேயே பட்டா வாங்கிக் கொள்ளலாம்.

https://tamilnilam.tn.gov.in/citizen/ என்று உட்பிரிவு, உட்பிரிவில்லா பட்டா மாறுதல் கோரும் விண்ணப்பங்களை உடனுக்குடன் செயல்படுத்த தமிழ்நிலம் (ஊரகம்) மற்றும் தமிழ்நிலம் (நகரம்) மென்பொருட்கள் உருவாக்கப்பட்டுள்ள நிலையில், புலப்படங்களிலும் அனைத்து உட்பிரிவு மாற்றங்களை கொண்டுவர ஏதுவாக "கொலாப்லேண்ட்" மென்பொருள் உருவாக்கப்பட்டு இந்த இணையதளத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

பட்டா, சிட்டா பார்வையிட, சரிபார்க்க, பதிவேடு, புறம்போக்கு நிலவிவரம், புலப்படம்/நகர நிலஅளவை வரைபடங்கள் ஆகியவற்றை இலவசமாக பார்வையிட, பதிவிறக்கம் செய்ய மற்றும் பட்டா மாறுதல் விண்ணப்ப நிலை விவரங்களை அறியும் இணையவழி சேவை www.eservices.tn.gov.in இணைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments