Breaking News

ஆடி பெருக்கு அன்று கண்டிப்பாக இதை மட்டும் செய்துவிடுங்கள்..!

டி மாதம் அம்பாளுக்குரிய மாதமாகும்.. இந்த மாதத்தில் வரக்கூடிய அனைத்து நாட்களுமே ஏதாவது ஒரு விசேஷ நாளாகதான் இருக்கும்..

அதன்படி மிகவும் விசேஷமாகக் கொண்டாடப்படுவது ஆடி 18. இது ஆடி பதினெட்டாம் பெருக்கு என்றும் சொல்லப்படுதுவண்டு.. இந்த ஆடிப்பெருக்கு நாளில் விரதம் இருந்து வழிபட்டால் பல்வேறு விதமான நன்மைகள் கிடைக்கும் எனக் கூறப்படுகிறது.

மேலும் இந்த நாளில் ஆறுகளில் புது வெள்ளம் பாயும் என்பதால், அன்று எது வாங்கினாலும் பலமடங்கு பெருகும் என்பது ஐதீகம்.. அதனால் அன்றைய தினம் என்ன வாங்கலாம்? என்ன செய்யனும் செய்யக்கூடாது என்பது பற்றி இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம் வாங்க...

1. விவசாயத்திற்கு மிகவும் தேவையானது நீர் வளம். அது எப்போதும் தேவை என்பதற்காகக் காவிரித்தாயை அன்றைய தினம் பூ, பழம் வைத்து வணங்க வேண்டும்..

2. ஆடிப் பெருக்கு மங்களகரமான நாள்.. அன்றைய தினம் எதை வாங்கினாலும் பெருகும். அத்தகைய அற்புத நாள் இந்த ஆடி 18. இந்த நாளில் நம்முடைய வசதிக்கு ஏற்ப நம்மால் முடிந்த பொருகளை வாங்கி வருவது நல்லது..

3. ஆடி பெருக்கு அன்று தங்கம் அல்லது வெள்ளி வாங்க முடிந்தால் வாங்கலாம்.. அப்படி வாங்கினால் அது மென்மேலும் பெருகி நம்முடைய வறுமையை நீக்கி குடும்பத்தில் சந்தோஷத்தை நிலைநாட்டும்..

4. ஆடி 18ஆம் நாள் அன்று தங்கம் அல்லது வெள்ளி வாங்க முடியாதவர்கள், புதிதாக மஞ்சள் கிழங்கு வாங்கலாம். மஞ்சள் மகாலட்சுமியின் அருளைக் கொண்டது.. மஞ்சள் பொடியாகவும் வாங்கி வீட்டில் வைக்கலாம். அந்த மஞ்சள் தங்கத்திற்கு இணையானது ஆகும். அதனால்தான் தாலி கயிற்றில் தங்கத்திற்கு பதிலாக மஞ்சள் கயிறும் கட்டிக் கொள்வார்கள்..

5. அதுபோலவே உப்பும் ஆடி 18ஆம் தேதி வாங்கி வைக்கலாம் என்பார்கள் நம் வீட்டு பெரியவர்கள்.. அதற்கு காரணம் இதுவும் மகாலட்சுமியின் அம்சமாகும்.. மகாலட்சுமி, குபேரனின் அம்சமாக உப்பு பார்க்கப்படுகிறது. அதனால் இதனை வாங்கி ஜாடியில் புதியதாக கொட்டி வைப்பது அனைத்து வித செல்வங்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

6. ஆடி 18ஆம் தேதியில் உணவை தானம் செய்வது சிறப்பு.. நாம் தானம் செய்வதால் கிடைக்கும் புண்ணியம், ஆடி பெருக்கில் பல மடங்கு பெருகும் என்பது ஐதீகம். அதனால் உங்களால் முடிந்த அளவு ஏழை, எளியவருக்கு உணவு தானமாக கொடுத்து புண்ணியத்தைச் சேர்த்துக் கொள்ளுங்கள்.

7. இந்த திருநாளில் பணம் மற்றும் நகை அகியவற்றை கடனாகப் பெற கூடாது கொடுக்கவும் கூடாது. இந்த திருநாளில் ஏழை மக்களுக்கு அன்னதானம் செய்தால் இறைவனின் முழு அருளையும் பெறலாம் என்பது நம்பிக்கை.

No comments