அரசு ஊழியர்களுக்கு பழைய பென்சன் திட்டம்... தமிழக அரசுக்கு கோரிக்கை:
தமிழகத்தில் தற்போது சிபிஎஸ் எனப்படும் பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் நடைமுறையில் உள்ளது. இதனை ரத்து செய்ய வேண்டும் எனவும் பழைய பென்சன் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் எனவும் அரசு ஊழியர்கள் போராடி வருகின்றனர்.
இதற்கென அவர்கள் சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் என தனி அமைப்பையே உருவாக்கி போராடி வருகின்றனர்.
இதனிடையே சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தின் மாநில அளவிலான ஆலோசனைக் கூட்டம் விருதுநகர் மாவட்டத்தில் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் முத்துராமலிங்கம் தலைமையில் நடைபெற்றது.
: கோவை மேயர் பதவிக்கு இன்று தேர்தல்.. கட்சி கவுன்சிலர்களுக்கு திமுக அறிவுரை!
இதில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. அதன் விவரம் பின்வருமாறு:-
அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட அளவிலான கூட்டங்கள் நடத்துதல்
மாநில ஒருங்கிணைப்பாளர்கள் 4 குழுவாக சென்று மாவட்ட கூட்டங்களில் பங்கேற்றல்
வட்ட அளவிலான அமைப்புகளை உருவாக்குதல்
பணிக் கொடை வழங்கக் கோரி பணியில் இருக்கும் ஊழியர், ஓய்வு பெற்ற ஊழியர், பணியில் இருக்கும் போது மரணமடைந்த குடும்பம் சார்பாக என 3 வழக்குகளை தனி நபர் பெயரில் தாக்கல் செய்தல்
சிபிஎஸ் திட்டத்தில் இறந்த ஊழியர்களின் குடும்பத்தை சேர்ந்தவர்கள் இம்மாதம் 15-ம் தேதி முதல் முதலமைச்சருக்கு கடிதம் அனுப்புதல் உள்ளிட்ட பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

No comments