Breaking News

10ம் வகுப்பு தகுதிதான்.. 57 ஆயிரம் சம்பளம்.. எஸ்எஸ்சியின் மெகா அறிவிப்பு.. 3 நாள்தான் இருக்கு

 


10 ஆம் வகுப்பு கல்வி தகுதி கொண்டவர்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பினை எஸ்.எஸ்.சி வெளியிட்டுள்ளது.

மல்டி டாஸ்க்கிங் ஸ்டாப், ஹவல்தார் ஆகிய பணிகளீல் 9,583 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க நாளை மறுநாள்தான் கடைசி நாளாகும்.

ஸ்டாஃப் செலக்‌ஷன் கமிஷன் எனப்படும் மத்திய அரசு பணியாளர் தேர்வு ஆணையம், மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்பி வருகிறது. பல ஆயிரங்களில் சம்பளம் + சலுகை, பணி பாதுகாப்பு ஆகியவை காரணமாக மத்திய அரசு பணிகளுக்கு செல்வது என்பது வேலை தேடும் இளைஞர்களின் பெரும் கனவாக உள்ளது.

இதனால், எஸ்.எஸ்.சி நடத்தும் தேர்வுகளை எழுதி அரசு வேலைக்கு செல்லும் வேட்கையுடன் தீவிரமாக தேர்வர்கள் படித்து வருகிறார்கள். இந்த நிலையில், தான், மல்டி டாஸ்கிங் ஸ்டாப் (MTS) மற்றும் ஸ்டாப் & ஹவல்தர் (Havaldar) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்..கல்வி தகுதி என்ன? வயது வரம்பு உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்..

பணியிடங்கள் விவரம்:

மல்டி டாஸ்கிங் ஸ்டாப்: 6,144 பணியிடங்கள்

Havaldar in CBIC and CBN: 3439 பணியிடங்கள்

கல்வி தகுதி & வயது வரம்பு: இரண்டு பணியிடங்களுக்குமே 10-ஆம் வகுப்பு முடித்திருந்தால் போதும். வயது வரம்பை பொறுத்தவரை எம்.டி.எஸ் பணியிடத்திற்கு 18 வயது முதல் 25-வயதுக்கு உட்பட்டோர் விண்ணப்பிக்கலாம். ஹவல்தார் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் 18- வயது முதல் 27 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்கவேண்டும்.

அரசு விதிகளின் படி வயது உச்ச வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும். எஸ்.சி/எஸ்.டி வகுப்பினருக்கு 5 ஆண்டுக்ளும், ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளூம் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும். மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் தளர்வு உண்டு.

சம்பளம் எவ்வளவு?: இரண்டு பணியிடங்களுக்குமே 18 ஆயிரம் முதல் 56,900 வரை சம்பளம் வழங்கப்படும். ஆர்வமும் போதுமான கல்வி உள்பட இதர தகுதிகளும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம். எம்.டி.எஸ் பணியிடத்திற்கு கணினி வழி தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். ஹவல்தார் பணிக்கு கணினி வழி தேர்வு, உடல் தகுதி தேர்வு (PET/PST) மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியான விண்ணப்பதார்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

தேர்வு நடைபெறும் இடங்கள்: கணினி வழி தேர்வை பொறுத்தவரை நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் நடைபெறும். தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி, நெல்லை, வேலூர் ஆகிய நகரங்களில் நடைபெறும். தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளிலும் தேர்வுகளை எழுதலாம்.

விண்ணப்ப கட்டணம்: பெண்கள், எஸ்.சி/எஸ்.டி உள்ளிட்ட பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது. பிற விண்ணப்பதார்கள் ரூ.100 கட்டணம் செலுத்த வேண்டும். ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் https://ssc.gov.in/ என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.

கடைசி நாள்: கடந்த 27.06.2024 முதல் விண்ணப்பிக்க அவகாசம் தொடங்கியது. விண்ணப்பிக்க வரும் சனிக்கிழமை (03.08.2024) கடைசி நாள். எனவே, ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்கள் தாமதிக்காமல் உடனே விண்ணப்பம் செய்யுங்கள். விண்ணப்பிக்கும் முன்பாக தேர்வு அறிவிப்பினை ஒருமுறை நன்கு படித்து தெரிந்து கொள்ளவும். தேர்வு அறிவிப்பை தெரிந்து கொள்ள இந்த லிங்கை https://ssc.gov.in/api/attachment/uploads/masterData/NoticeBoards/important%20notice%20to%20MTS%202024%20pdf31724.pdf கிளிக் செய்யவும்.

No comments