Breaking News

திடீரென செல்போன் வெடிப்பது ஏன்..? தடுப்பது எப்படி..? அப்படினா மறக்காம இந்த விஷயத்தை பண்ணுங்க..!!

 


ற்போதைய காலகட்டத்தில் செல்போன் இல்லாத நபர்களை பார்ப்பது அரிதாகிவிட்டது. ஒருவரை எளிதில் தொடர்பு கொள்ளவும், பல தகவல்களை தெரிந்துகொள்ளவும், பொழுதுபோக்கு போன்ற அனைத்து வசதிகளும் ஃபோனில் உள்ளதால், சிலர் இரண்டு, மூன்று செல்போன் பயன்படுத்தி வருகின்றனர்.

மேலும், இந்த செல்போன் வெடிப்பதையும் நாம் கேட்டுள்ளோம். சிலர் பார்த்தும் உள்ளனர். செல்போன்கள் ஏன் வெடிக்கிறது, இதனை தடுப்பது எப்படி..? என்பது குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.

அதிக விலை கொடுத்தும் குறைந்த விலை கொடுத்தும் செல்போன்களை பொதுமக்கள் வாங்குகின்றனர். ப்ராசசர் குறைவாக இருக்கும் செல்போனில் அளவுக்கு அதிகமாக செயலி பயன்படுத்துவது, அதிக ரேம் கொண்ட ப்பஜி போன்ற கேம்களை விளையாடுவதால் செல்போன் சூடாகி பேட்டரி வெடிக்கிறது. மேலும், சார்ஜ் தொடர்ந்து போடுவதால் பேட்டரி சூடாகி செயல்திறன் குறைந்து வெடிக்கும். சார்ஜ் போட்டுக்கொண்டு கேம் விளையாடுவது, செல்போன் உபயோகிப்பது போன்றவை செய்வதாலும் அவை வெடிக்கக் கூடும்.

இரவு நேரத்தில் மின்சாரம் அதிகமாக வரும். இதனால் இரவில் சார்ஜ் போடுவதால் அதில் உள்ள வாட்ஸ் திறனிற்கு மேல் மின்சாரம் கிடைப்பதால் வெடிக்கக் கூடும். இதனை தவிர்க்க வேண்டுமென்றால், இரவு நேரத்தில் சார்ஜ் போடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். 90% மேல் சார்ஜ் ஆகிவிட்டால், அதற்கு மேல் சார்ஜ் போட வேண்டாம். சார்ஜ் போடும்போது செல்போன் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். செல்போன் வாங்கி ஒன்றரை வருடம் கடந்தால் அதன் பேட்டரியின் தன்மை குறையும். இதனால் கூட வெடிக்க வாய்ப்புகள் உள்ளதால், சர்வீஸ் சென்டரில் பேட்டரியை மாற்றிக்கொள்ளலாம்.

பேட்டரியில் உள்ள வேதிப்பொருட்கள் ஒன்றோடு ஒன்று சேருவதாலும் பேட்டரி வெடிக்க வாய்ப்புள்ளது/ இதனால் இரவில் தூங்கும் போது அல்லது தினமும் ஒருமுறை ஸ்விட்ச் ஆப் செய்வதை வழக்கமாக வைத்துக் கொள்ளுங்கள். இன்டர்நெட் மொபைல் டேட்டாவை தேவைப்படும் போது மட்டும் ஆன் செய்ய வேண்டும். அதிக ரேம் கொண்ட கேம்களை ஏற்றி விளையாடாமல் அந்த செல்போனின் ப்ராசசர்க்கு ஏற்ப உள்ள கேம்களை விளையாடலாம். இதனால் செல்போன் சூடாகுவதை தடுக்க முடியும்.

நாம் செல்போனை பயன்படுத்திய பின், பேக்கிரவுன்டில் செயலிகள் இயங்கும். அதனை கிளியர் ஆல் கொடுத்து விட வேண்டும். நீண்டநேரம் பயன்படுத்துவதை முற்றிலும் தடுக்க வேண்டும். செல்போன் வெடிப்பது இரண்டு காரணங்கள் தான் ப்ராசசர் மற்றும் பேட்டரி. இதனை மேற்கண்ட வழிமுறைகள் மூலம் முறையாக பயன்படுத்தினால் செல்போன் வெடிப்பது தவிர்க்கலாம்.

No comments