அனுபவம் வேண்டாம் + ரூ.5 லட்சம் வரை சம்பளம்.. பிரபல ஐடி நிறுவனத்தில் அசத்தலான வேலைவாய்ப்பு:
டெக்சைட் (TechXyte) எனும் ஐடி நிறுவனத்தில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இந்த பணிக்கு 0 முதல் 2 ஆண்டு பணி அனுபவம் கொண்டவர்கள் விண்ணப்பம் செய்யலாம். பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு ஆண்டுக்கு ரூ.4 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை சம்பளம் என்பது வழங்கப்பட உள்ளது.
டெக்சைட் என்பது பெங்களூரில் செயல்பட்டு வரும் ஐடி நிறுவனமாகும். இந்த நிறுவனம் என்பது ஐடி துறையில் டெவலப்பர் ஆக வேண்டியவர்களுக்கான பயிற்சி, கோடிங் மற்றும் இண்டர்வியூ உள்ளிட்டவற்றை வழங்கி வருகிறது.
இந்நிலையில் தான் தற்போது டெக்சைட் நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:
டெக்சைட் (TechXyte) நிறுவனத்தில் தற்போது என்ட்ரி லெவல் ஜாவா டெவலப்பர் (Entry Level Java Developer) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்புவோர் இளநிலை பிரிவில் கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் டிகிரி முடித்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் இன்ஜினியரிங் அல்லது தொடர்புடைய துறையில் படிப்பை முடித்திருக்க வேண்டும்.
ஜாவா டேட்டா ஸ்டெக்சர்ஸ் மற்றும் அல்காரிதம்ஸ் தெரிந்திருக்க வேண்டும். ஜாவா புரோகிராமிங் லேங்குவேஜ் மற்றும் ஜே2இஇ ப்ரேம் வொர்க்(J2EE framework) பற்றிய புரிதலை கொண்டிருக்க வேண்டும். மேலும் SQL/NoSQL databases மற்றும் ஓஆர்எம் பிரேம்வொர்க்ஸான Hibernate அறிந்திருக்க வேண்டும். பிரச்சனைகளை தீர்க்கும் திறன் கொண்டிருப்பதோடு அனலிட்டிக்கல் ஸ்கில்ஸ் இருக்க வேண்டும்.
இந்த பணிக்கு மேற்கூறிய பணியில் 0 முதல் 2 ஆண்டு அனுபவம் கொண்டிருக்க வேண்டும். இதன்மூலம் மேற்கூறிய விஷயங்கள் தெரிந்து பணி அனுபவம் இல்லாதவர்களும் விண்ணப்பம் செய்யலாம். பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு ஆண்டு சம்பளமாக குறைந்தபட்சம் ரூ.4 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை வழங்கப்படும். இது ஒவ்வொருவரின் திறமை, பணி அனுபவத்தை பொறுத்து மாறுபடும்.
இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் பெங்களூரில் உள்ள அலுவலகத்தில் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் TechXyt நிறுவனத்தின் இணையதளம் மூலம் விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்பத்துக்கான கடைசி தேதி எதுவும் அறிவிப்பில் தெரிவிக்கப்படவில்லை. இதனால் முடிந்தவரை சீக்கிரமாக விண்ணப்பம் செய்வது நல்லது.
No comments