Breaking News

இந்தியன் ரயில்வேயில் வேலை! மொத்தம் 4096 காலியிடங்கள்.. கல்வி தகுதி கூட ரொம்ப கம்மி! மேஜர் அறிவிப்பு:

 

வடக்கு ரயில்வேயின் ரயில்வே ஆட்சேர்ப்பு பிரிவு (ஆர்ஆர்சி) அப்ரெண்டிஸ் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் நாளை முதல் செப்டம்பர் 16 வரை விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான தகுதிகள் என்ன என்பதை நாம் பார்க்கலாம்.

இந்தியாவிலேயே மிகப் பெரிய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான ரயில்வே துறை இப்போது அப்ரெண்டிஸ் பணியிடங்களுக்கு ஆள் எடுப்பது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அறிவிப்பு: அதாவது வடக்கு இரயில்வேயில் உள்ள பல்வேறு பிரிவுகள்/ யூனிட்களில்/ ஒர்க்ஷாப்களில் பயிற்சி பெற 1961 அப்ரெண்டிஸ் சட்டத்தின் கீழ் 4096 அப்ரெண்டிஸ்களை தேர்வு செய்வது குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் விரும்புவோர் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இதில் விண்ணப்பிக்கும் நபர்களில் இருந்து தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு நவம்பர் 2024இல் இது குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

அப்ரெண்டிஸ்களை பணியமர்த்துவது குறித்த அறிவிப்பு கடந்த ஆகஸ்ட் 13ம் தேதி வெளியிடப்பட்டது. ரயில்வே ஆட்சேர்ப்பு பிரிவின் அதிகாரப்பூர்வ தளத்தில் இதற்குத் தேவையான அனைத்து தகவல்களும் உள்ளன. விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் அதில் தேவையான தகவல்களை செக் செய்து கொள்ளலாம்.

எங்கே: மொத்தம் 4096 அப்ரெண்டிஸ்கள் இதில் எடுக்கப்பட இருக்கிறார்கள். அதிகபட்சமாக லக்னோவில் 1607 அப்ரெண்டிஸ்கள் பணியமர்த்தப்பட உள்ளனர். தொடர்ந்து டெல்லியில் 919 பேரும், அம்பாலாவில் 494 பேரும் அப்ரெண்டிஸ்களாக தேர்வாக உள்ளனர். மேலும், ஃபிரோஸ்பூரில் 459 பேர், ஜகதாரி யமுனா நகரில் 420 பேர், அமிர்தசரஸ் மெக்கானிக்கல் ஒர்க்ஷாப்பில் 125 பேர், NHRQ/NDLS P கிளை 134 பேர், மொராதாபாத்தில் 16 பேர் அப்ரெண்டிஸ்கள் பணிக்குத் தேர்வாக உள்ளனர்.

பிற தகவல்கள்: இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 10ஆம் வகுப்பில் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், குறிப்பிட்ட பிரிவுகளில் ஐடிஐ பட்டம் வைத்திருக்க வேண்டும். இதில் விண்ணப்பிக்க விரும்புவோரின் குறைந்தபட்ச வயது 15, மேலும், அதிகபட்ச வயது 24 ஆகும்.

நிறுவனம்: ரயில்வே ஆட்சேர்ப்பு பிரிவு (RRC), வடக்கு ரயில்வே

வேலை: அப்ரெண்டிஸ்

Advt No: RRC NR Apprentice Recruitment 2023

காலியிடங்கள்: 4096

எப்போது முதல் விண்ணப்பிக்கலாம்- ஆகஸ்ட் 16

கடைசி தேதி: செப்டம்பர் 16, அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.

எப்படி விண்ணப்பிக்க வேண்டும்: இந்த அப்ரெண்டிஸ் பணிக்கு விண்ணப்பிக்க முதலில் நீங்கள் RRC NR தளத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்ல வேண்டும். அதில் ஹோம் பேஜில் இதற்காக இருக்கும் ஆன்லைன் லிங்கை கிளிக் செய்யவும். விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து அனைத்து தேவையான ஆவணங்களையும் பதிவேற்றவும். கட்டணத்தைச் செலுத்தி விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கவும்.

இதில் நாம் ஆன்லைனிலேயே விண்ணப்பிக்கலாம். போஸ்ட் மூலம் விண்ணப்பத்தை அனுப்பத் தேவையில்லை.. இருப்பினும், தேவை என்றால் விண்ணப்பப் படிவத்தை பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக் கொள்ளவும். மேலும், இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கும் போது ரூ. 100 தேர்வுக் கட்டணமாகச் செலுத்த வேண்டும். . அதேநேரம் எஸ்சி, எஸ்டி, பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினர், மாற்றுத்திறனாளிகள், பெண்கள் ஆகியோர் எந்தவொரு கட்டணத்தையும் செலுத்தத் தேவையில்லை.

No comments