Breaking News

காத்திருக்கும் மத்திய அரசு ஊழியர்களுக்கு வருகிறது ஜாக்பாட் அறிவிப்பு..!! அகவிலைப்படி உயர்வு..?

 

த்திய அரசு ஊழியர்களுக்கு 3 முதல் 4 சதவீதம் வரை அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு இருக்கும் எனக் கூறப்பட்டாலும், இறுதி முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை என்று தெரிகிறது. பணவீக்கப் போக்குகளைப் பொறுத்து 4 சதவீதம் வரை அகவிலைப்படி உயர்வு வாய்ப்பு இருக்கிறது. தற்போதைய ​​அகவிலைப்படி அடிப்படை ஊதியத்தில் 50 சதவீதமாக உள்ளது. 7-வது ஊதியக் குழுவின் கீழ் அடிப்படை ஊதியத்துடன் அகவிலைப்படியை இணைப்பது குறித்து விவாதங்கள் நடைபெற்றன. ஆனால், அகவிலைப்படி 50 சதவீதத்தைத் தாண்டினால் இது சாத்தியம் கிடையாது.

அதற்கு பதிலாக, வீட்டு வாடகை படி போன்ற பிறவற்றை அதிகரிக்க பரிசீலனை செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. மார்ச் 2024இல், மத்திய அரசு அகவிலைப்படியை அடிப்படை ஊதியத்தில் 4% உயர்த்தியது. அதேபோல், ஓய்வூதியம் பெறுவோருக்கான அகவிலை நிவாரணமும் 4 சதவீதம் உயர்த்தி அறிவிக்கப்பட்டது. ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் இருந்து அமலுக்கு வரும் வகையில், ஆண்டுக்கு 2 முறை அகவிலைப்படி உயர்த்தப்பட்டு வருகிறது.

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்களின் கூட்டமைப்பு 8-வது ஊதியக் குழுவை உருவாக்க வேண்டும் என்றும், 2024 பட்ஜெட்டுக்கு முன்னதாக பழைய ஓய்வூதியத் திட்டத்தைக் கொண்டுவர வேண்டுமெனவும் வலியுறுத்தியது. ஆனால், 8-வது ஊதியக் குழு அமைக்கும் திட்டம் இல்லை என மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி ஜூலை 30ஆம் தேதி மாநிலங்களவையில் தெரிவித்தார். 7-வது ஊதியக் குழு பிப்ரவரி 2014இல் நிறுவப்பட்டது. அதன் பரிந்துரைகள் ஜனவரி 1, 2016 முதல் நடைமுறைக்கு வந்தன.

No comments