Breaking News

இனி நெட் இல்லாமல் வாட்ஸ்அப்பில் ஃபைல்களை பகிரலாம்.. எப்படி தெரியுமா?

 

மொபைல் யூஸர்களிடையே ஃபைல்களை பகிர பயன்படுத்தக்கூடிய Quick Share என்ற ஃபைல்களை ஷேர் செய்யும் புதிய அம்சத்தை வாட்ஸ்அப் சமீபத்தில் சோதனை செய்துள்ளது.
தற்போது இந்த கருவியை ஒரு புதிய நிலைக்கு எடுத்துச் செல்ல முடிவு செய்துள்ளது வாட்ஸ்அப்.

அதாவது இனி நெட் இல்லாமலேயே ஆண்டிராய்டு மற்றும் ஐபோனுக்கு இடையே வயர்லெஸ் முறையில் ஃபைல்களைப் பகிர இந்த வசதி உங்களை அனுமதிக்கிறது. என்ன ஆச்சர்யமாக இருக்கிறதா? இது குறித்து தெளிவாக தெரிந்துகொள்வோம் வாருங்கள்...

இந்த வசதி தற்போது வளர்ச்சிக் கட்டத்தில் உள்ளது. மேலும் இது ஃபைல் பகிர்வை முன்னெப்போதையும் விட எளிதாக்குவதாக உறுதியளிக்கிறது. இதில் முக்கியமான அம்சம் என்னவென்றால், இதைச் செய்ய உங்களுக்கு இணையம் தேவையில்லை. உங்கள் போனிலுள்ள புளூடூத் மற்றும் அருகிலுள்ள சாதன வசதிகளை பயன்படுத்தி பாதுகாப்பான முறையில் இது செயல்படும்.

ஆண்ட்ராய்டில் இருந்து ஐபோனுக்கு ஆஃப்லைன் மூலம் ஃபைல்கள் பரிமாற்றம் - இது எப்படி முடியும்?

வாட்ஸ்அப் பீட்டா அம்சங்கள் குறித்த தகவல்களை WeBetaInfo என்ற தளம் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. இவர்கள் தான் சமீபத்திய அப்டேட் குறித்த தகவல்களையும் அளித்துள்ளனர். இந்த வாரம் வாட்ஸ்அப்பின் iOS பீட்டா வெர்ஷனில் இந்த அம்சம் காணப்பட்டதாகவும், இதில் Nearby Share என்ற டூல் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

வைஃபை டைரக்ட் (Wi-Fi Direct) என்ற அம்சத்தைப் பயன்படுத்தி அனைத்து மீடியா உள்ளடக்கம், ஆவணங்கள் மற்றும் பிற கோப்புகளைப் பகிர இந்த அம்சம் உங்களை அனுமதிக்கும். இதனால் இது இரண்டு ஐபோன் பயனர்களுக்கும் இடையே பயன்படுவதோடு ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் உள்ளவர்களுக்கு இடையிலும் கூட ஃபைல்களை பகிரக்கூடியதாக உள்ளது. ஆப்பிள் போன் பயன்படுத்தும் iOS வாட்ஸ்அப் பயனர்களுக்கான Nearby Share-ல் உள்ள முக்கிய வேறுபாடு என்னவென்றால், ஃபைல்களின் பரிமாற்றத்தை தொடங்க மற்ற பயனரால் ஸ்கேன் செய்யப்பட வேண்டிய QR குறியீடு அவர்கள் போனில் வரும்.

: ஸ்னாப்டிராகன் 7+ ஜென் 3 ப்ராசஸர் & சோனி கேமரா... அசத்தல் அம்சங்களுடன் அறிமுகமாகி உள்ள OnePlus Nord 4..!

ஐபோனில் உள்ள Nearby Share வசதி தற்போது உள்ளக பரிசோதனைக் குழுவினர் மட்டும் பயன்படுத்தி வருவதாகவும், கூடிய விரைவில் அனைத்து ஐபோன் வாட்ஸ்அப் பயனர்களுக்கும் இந்த வசதியை Meta நிறுவனம் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில், ஆண்ட்ராய்டு பீட்டா பயனர்களிடம் ஃபைல் பரிமாற்றக் கருவி சோதிக்கப்பட்டது. இந்த ஃபைல் பரிமாற்றம் பொதுவாக இரண்டு சாதனங்களுக்கு இடையேயான புளூடூத் இணைப்பின் உதவியுடன் செயல்படுகிறது. தற்போது வாட்ஸ்அப்பும் அதே வசதியை இங்கேயும் பயன்படுத்துகிறது.

: ஆசஸ் M3702 ஆல்-இன்-ஒன் பிசி இந்தியாவில் அறிமுகம்! விலை மற்றும் அம்சங்கள் என்னென்ன தெரியுமா?

இந்த வசதி மூலம் வாட்ஸ்அப்பில் உங்களால் 2ஜிபி வரையிலான கோப்புகளைப் பகிர முடியும். ஆகையால் இனி சாட்டிங் மூலம் ஃபைல்களை அனுப்புவதற்குப் பதிலாக, இந்தக் கருவியைப் பயன்படுத்தி கோப்புகளை அனுப்புவது பயனர்களிடையே பிரபலமான தேர்வாக இருக்க அதிக வாய்ப்புள்ளது.

No comments