அரசு ஊழியர்களின் சம்பளம் அடியோடு மாற போகுது.. அதிரடியாக வெளியான 10 தகவல்கள்.. நோட் பண்ணுங்க
மத்திய அரசு ஊழியர்களின் பென்சன் மற்றும் சம்பளத்தில் 10 முக்கியமான மாற்றங்கள் வரும் நாட்களில் ஏற்பட உள்ளன.
அந்த மாற்றங்கள் குறித்து இங்கே பார்க்கலாம்.
1. மத்திய அரசு ஊழியர்களுக்கான அடுத்த அகவிலைப்படி உயர்வு 3 சதவிகிதம் இருக்கலாம் என்று அரசு தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சீனியர் ஊழியர்களுக்கு சுமார் 1.90 லட்சம் ரூபாய் வரை நிதி ஒதுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
2. கிட்டத்தட்ட ஒன்றரை கோடி குடும்பங்களுக்கு இதனால் நேரடி பலன் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே மத்திய அரசு ஊழியர்களுக்கு இந்த ஆண்டு டிஏ உயர்வு 4 சதவிகிதம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி 46 சதவிகிதமாக உள்ள டிஏ 50 ஆக உயர்ந்துள்ளது.
3. அடுத்த அகவிலைப்படி உயர்வு 3% உயரும் பட்சத்தில் டிஏ 53 சதவிகிதம் ஆக மாறும். அப்படி மாறும் பட்சத்தில் இப்போது 15 ஆயிரம் ரூபாய் அகவிலைப்படி பெறுபவர்கள் 16500 ரூபாய் வரை அகவிலைப்படி பெறுவார்கள்.
4. இது போக மத்திய அரசு ஊழியர்களுக்கு இந்த ஆண்டு அகவிலைப்படி உயர்வோடு சேர்த்து எச்ஆர்ஏ உயர்வும் இருக்கும் என்று அரசு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி தற்போது எக்ஸ், ஒய், இசட் என்று மூன்று பிரிவுகளில் எச்ஆர்ஏ சம்பளம் தரப்படுகிறது.
5. இவை முறையே 27 சதவிகிதம், 18 சதவிகிதம், 9 சதவிகிதம் ஆகும். இந்த நிலையில்தான் இதில் எல்லா பிரிவிற்கும் தலா 3 சதவிகிதம் உயர்வு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொதுவாக அகவிலைப்படி 50 சதவிகிதத்தை தாண்டினால் மட்டுமே எச்.ஆர். ஏ உயர்த்தப்படும். அதனால் இந்த முறை உயர்த்தப்படலாம்.
6. அதேபோல் 18 மாதங்களுக்கான டிஏ அரியர் விரைவில் வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
7. ஒருங்கிணைந்த பென்சன் திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இந்த பென்சன் திட்டத்திற்கு கீழ் பென்சன் மட்டுமன்றி அகவிலைப்படியும் சேர்ந்து வழங்கப்படும்.
8. ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்திற்கு (யுபிஎஸ்) மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. யுபிஎஸ் திட்டத்தின் கீழ், அரசு ஊழியர்கள் ஓய்வு பெறுவதற்கு முந்தைய 12 மாதங்களிலிருந்து சராசரி அடிப்படை ஊதியத்தில் 50 சதவீதத்தை ஓய்வூதியமாகப் பெறுவார்கள் என்று முடிவெடுக்கப்பட்டு உள்ளது. அடிப்படை ஊதியத்தில் 50 சதவீதத்திற்கு சமமான இந்த முழு ஓய்வூதியத்திற்கு தகுதி பெற, ஊழியர்கள் குறைந்தபட்சம் 25 ஆண்டுகள் பணியை முடித்திருக்க வேண்டும்.
9. இப்போது ஒரு ஊழியரின் அடிப்படை ஊதியம் 50 ஆயிரம் என்று வைத்துக்கொள்வோம். அவருக்கு 25 ஆயிரம் ரூபாய் பென்ஷனாக வழங்கப்படும். ஆனால் அது மட்டுமல்ல.. கூடுதலாக.. பென்சனுடன் கூடுதலாக அகவிலைப்படி வழங்கப்படும். அதாவது தற்போது உள்ள 50% அகவிலைப்படி என்பது அடிப்படை ஊதியத்தில் பாதி ஆகும். அதாவது 25 ஆயிரம். எனவே மொத்தமாக 50 ஆயிரம் ரூபாய் மொத்தமாக அரசு ஊழியருக்கு பென்ஷனாக வழங்கப்படும். இதை அடிப்படையாக வைத்து மற்ற வருமானத்திற்கு கணக்கிடலாம்.
10 அடுத்த நிதியாண்டிலிருந்து, தேசிய ஓய்வூதியத் திட்ட சந்தாதாரர்கள், உறுதிசெய்யப்பட்ட ஓய்வூதியத்தை வழங்கும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்திற்கு (UPS) மாறுவதற்கான ஆப்ஷன் வழங்கப்படும். புதிய ஓய்வூதியம், யுபிஏ இரண்டில் ஒன்றை அவர்கள் தேர்வு செய்யலாம். யுபிஎஸ் ஓய்வூதிய திட்டத்தில்.,. புதிய ஓய்வூதிய திட்டத்தை விட அதிக பென்ஷன் கிடைக்கும். 'ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்திற்கும்' 'தேசிய ஓய்வூதியத் திட்டத்திற்கும்' உள்ள வித்தியாசம்:
ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தின் கீழ், ஓய்வு பெற்றவர்கள் குறைந்தபட்சம் 25 ஆண்டுகள் பணியை முடித்திருந்தால், கடைசி 12 மாத சேவையின்சராசரி அடிப்படை ஊதியத்தில் 50 சதவீதத்தை ஓய்வூதியமாகப் பெறுகிறார்கள். 10 முதல் 25 ஆண்டுகள் பணிபுரிபவர்களுக்கு, அவர்களின் பணிக்காலத்துக்கு ஏற்றவாறு ஓய்வூதியம் வழங்கப்படும். இந்த புதிய திட்டம் ஏப்ரல் 1, 2025 முதல் அமலுக்கு வரும் . மார்ச் 31, 2025க்குள் ஓய்வு பெறுபவர்களுக்கு இந்தத் திட்டத்தின் பலன்கள் பொருந்தும்.
No comments