Breaking News

திருப்பதிக்கு எந்த மாதம் சென்றால் கூட்டமில்லாமல் சாமி தரிசனம் செய்யலாம் தெரியுமா?

 


திருப்பதிக்கு செல்ல வேண்டும் என்று விரும்புபவர்கள், 3 மாதங்களுக்கு முன்பே திட்டமிட்டால் தான், ஆன்லைனில் தரிசன டோக்கன்களை முன்பதிவு செய்ய முடியும்.

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, ஓரிரு நாட்கள் விடுமுறை கிடைத்தால் கூட, திருப்பதி தரிசன டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யவில்லை என்றால் கூட, திருப்பதிக்கு சென்று, இலவச தரிசன டோக்கன்களை வரிசையில் நின்று பெற்று தரிசனம் செய்த நாட்கள் உண்டு. ஆனால், பக்தர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்பதால், எப்போது சென்றாலும் உடனடியாக தரிசனம் காண முடியாது. எப்பொழுது திருப்பதிக்கு சென்றால் நிதானமாக, கூட்ட நெரிசல் இல்லாமல் சாமி தரிசனம் செய்ய முடியும் ?

மாதக்கணக்காக திட்டமிட்டு, ஸ்பெஷல் தரிசன டோக்கன்களை முன்பதிவு செய்து, திருப்பதிக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தால் கூட அதிகரிக்கும் பக்தர்கள் எண்ணிக்கையால், சில நொடிகள் கூட நின்று சுவாமியை கண் குளிர தரிசனம் செய்ய முடியாத நிலை உள்ளது. குறிப்பிட்ட மாதங்களில் திருப்பதி சென்றால் கூட்டம் குறைவாக இருக்கும். நிதானமாக எழுமலையானை தரிசனம் செய்யலாம்.

திருப்பதியில் அதிக கூட்ட நெரிசல் இல்லாமல் சாமி தரிசனம் செய்ய மூன்று வழிகள் உள்ளன.
பொதுவாகவே பிப்ரவரி மாதம் மற்றும் நவம்பர் மாதங்களில் திருப்பதியில் பக்தர்களின் எண்ணிக்கை குறையும். பள்ளி குழந்தைகளுக்கு பரீட்சைக்கு முந்தைய மாதங்கள் என்பதால், குழந்தைகளுடன் வரும் பெரியவர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும். குடும்பமாக வந்து தரிசனம் செய்பவர்கள் எண்ணிக்கை குறைவதால், நிதானமாக சாமி தரிசனம் காணலாம்.

ஜூன் மாதம் பள்ளிகள் தொடங்கினாலும், கல்லூரிகள் ஜூலை மாதத்தில் அல்லது அதற்கு பிறகு திறக்கும். எனவே, புரட்டாசி மாத பிறப்பு முன்பு வரை, ஆகஸ்ட் மூன்றாம் வாரத்தில் இருந்து மற்றும் செப்டம்பர் முதல் இரண்டு வாரங்களில் கூட்டம் குறைவாக இருக்கும்.

ஒரு சில பண்டிகைகளின் போது திருப்பதியில் பக்தர்களின் எண்ணிக்கை கணிசமாக குறையும்.
முதலாவதாக விநாயகர் சதுர்த்தி இந்தியா முழுவதும் பரவலாக கொண்டாடப்படுகிறது. ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலத்தவர்களும் விநாயகர் சதுர்த்தியை விமர்சையாக கொண்டாடுவார்கள். எனவே விநாயக சதுர்த்தியின் போது திருப்பதியில் கூட்டம் மிக மிகக்குறைவாக இருக்கும். அதேபோல, தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகையின் போது திருப்பதியில் கூட்டம் குறைவாக இருக்கும்.


No comments