Breaking News

30 ஆண்டுகளுக்குப் பிறகு ரூ.1 கோடியின் மதிப்பு என்னவாக இருக்கும்?

 


ன்றைய காலகட்டத்தில், 1 கோடி ரூபாயுடன் ஓய்வு பெறுவது பெரிய தொகையாகத் தோன்றலாம். ஏனெனில் இதை வைத்து ஒரு வீட்டை சொந்தமாக வாங்குவது, குழந்தையின் கல்விக்கு செலவழிப்பது அல்லது குழந்தையின் திருமணச் செலவுகளை ஈடுகட்டுவது போன்ற பல்வேறு ஓய்வூதிய இலக்குகளை எளிதாக நிறைவேற்ற முடியும்.
எனினும், 10, 20 அல்லது 30 ஆண்டுகளுக்குப் பிறகு நீங்கள் ஓய்வு பெற்றால் இந்தத் தொகை போதுமானதாக இருக்குமா என்று நீங்கள் எப்போதாவது சிந்தித்ததுண்டா? உண்மை என்னவென்றால், பணவீக்கம் காலப்போக்கில் பணத்தின் மதிப்பைக் குறைத்து வருகிறது. மேலும் இன்று அதிகமான தொகையாகத் தெரிவது எதிர்காலத்தில் உங்கள் ஓய்வுக்குப் பிந்தைய தேவைகளைப் பூர்த்தி செய்ய போதுமானதாக இருப்பதில்லை. பணவீக்கம் எவ்வாறு உங்கள் சேமிப்பின் வாங்கும் சக்தியை படிப்படியாகக் குறைக்கிறது என்பதை தெரிந்துகொண்டு, நீண்ட கால நிதித் திட்டமிடலின் முக்கியத்துவத்தை தெரிந்துகொள்ளலாம்.

பணவீக்கம் பணத்தின் மதிப்பை எவ்வாறு குறைக்கிறது?

உங்கள் வங்கிக் கணக்கில் ரூ.1 கோடி இருப்பது இன்று பெரியதாகத் தோன்றலாம். ஆனால் உங்கள் எதிர்கால நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்ய இது போதுமானதாக இருக்காது. ஏனெனில் பணவீக்கத்தால் பணத்தின் மதிப்பு காலப்போக்கில் குறைகிறது.

: பிரதமர் ஜன் தன் யோஜனா திட்டம் 10 ஆண்டுகள் நிறைவு.. 52 கோடி கணக்குகளில் ரூ.2 லட்சம் கோடி டெபாசிட்

உதாரணமாக, இன்று ஒரு காரின் விலை ரூ.10 லட்சம் என்றால், 15 ஆண்டுகளில் அதன் விலை அதை விட அதிகமாக இருக்கும். இதை நன்றாகப் புரிந்து கொள்ள, 10 அல்லது 15 ஆண்டுகளுக்கு முன்பு மளிகைப் பொருட்கள் அல்லது வீட்டு வாடகைக்கு நீங்கள் எவ்வளவு செலவு செய்தீர்கள் என்பதை இப்போது ஒப்பிட்டு பாருங்கள். பணவீக்கம் பணத்தின் மதிப்பை எவ்வாறு குறைக்கிறது என்பதை தெரிந்துகொள்வீர்கள். எனவே, இப்போது ரூ.1 கோடி பெரியதாகத் தோன்றினாலும், எதிர்காலத்தில் அது போதுமானதாக இருக்காது.

10, 20 அல்லது 30 ஆண்டுகளுக்குப் பிறகு ரூ.1 கோடியின் மதிப்பு என்னவாக இருக்கும்?

ஆண்டுக்கு 6% பணவீக்க விகிதம் என்று வைத்துக் கொண்டால், ரூ.1 கோடியின் மதிப்பு 10 ஆண்டுகளில் ரூ.55.84 லட்சமாகக் குறையும். அதுவே 20 ஆண்டுகளுக்குப் பிறகு, ரூ.1 கோடியின் மதிப்பு சுமார் ரூ.31.18 லட்சமாகச் சுருங்கியிருக்கும். இறுதியாக, 30 ஆண்டுகளுக்குப் பிறகு, இன்றைய மதிப்பில் ரூ.1 கோடி தொகை தோராயமாக ரூ.17.41 லட்சமாக குறைந்திருக்கும்.

சுருக்கமாக, நடுத்தர மற்றும் நீண்ட கால அடிப்படையில் ரூபாயின் மதிப்பில் ஏற்பட்டுள்ள சரிவு, ஓய்வூதிய திட்டமிடலின் முக்கியத்துவத்தையே இது எடுத்துக்காட்டுகிறது. இன்றைய வாங்கும் சக்தியின் அடிப்படையில் நாம் நமது நிதியைத் திட்டமிடுகிறோம். ஆனால் இது காலப்போக்கில் படிப்படியாகக் குறையும் தன்மைக் கொண்டது என்பதை உணர்ந்து அதற்கு ஏற்ப உங்கள் சேமிக்கும் திறனை நீங்கள் அதிகரிக்க வேண்டும்.

No comments