Breaking News

குரல் பதிவை எழுத்து வடிவில் மாற்றம்.. வாட்ஸ்அப் பயனர்களுக்கு கலக்கல் அப்டேட்!

 

வாட்ஸ்அப்பில் குரல் பதிவை எழுத்து வடிவில் மாற்றும் புதிய அப்டேட்டை மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

உலக அளவில் தகவல்களை பரிமாறிக்கொள்ள உதவும் முதன்மையான செயலியாக வாட்ஸ் அப் உள்ளது. வெறும் குறுஞ்செய்திகள் மட்டுமின்றி, வீடியோ, வாய்ஸ், டெக்ஸ்ட் சாட் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் உள்ளது. இதனால் வாட்ஸ் அப்பை உலகம் முழுவதும் பில்லியன் கணக்கிலான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். பெரும்பாலான அலுவலகச் செயல்பாடுகள் மற்றும் நடைமுறைகள், இப்போதெல்லாம் வாட்ஸ்அப் குழுக்கள் மூலமாகத்தான் பகிரப்படுகின்றன.

தகவல் தொடர்பின் ராஜாவாக வாட்ஸ்அப் மாற்றியுள்ளது. வாட்ஸ்அப் நிறுவனம் பயனர்களுக்கு கூடுதல் வசதிகளை வழங்கும் பொருட்டு தொடர்ந்து ஏகப்பட்ட அப்டேட்களை வழங்கி வருகிறது. இந்த வாட்ஸ்அப் செயலியை பொழுதுபோக்கிற்காக நண்பர்களுடன் உரையாட பயன்படுத்துவதோடு மட்டுமல்லாமல் வணிக நோக்கத்திற்காக பயன்படுத்தும்படியாக ஏகப்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் வழங்கப்பட்டு வருகிறது.

வாடிக்கையாளர்களை கவர புதிய வசதிகளை அவ்வப்போது வெளியிடுவது வழக்கமாகும். அந்த வகையில் பயனர்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் வாட்ஸ்அப் நிறுவனம் விரைவில் புதிய அப்டேட் ஒன்றை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.

அதன்படி ஆங்கிலம், குரல் பதிவாக அனுப்பபடும் குறுஞ்செய்திகளை அதே மொழியில் எழுத்து வடிவமாக மாற்றும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மூன்றாம் தரப்பு செயலிகளை பயன்படுத்தி குரல் பதிவுகளை எழுத்து வடிவமாக மாற்ற வேண்டிய தேவை ஏற்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு இந்த அப்டேட் வழங்கப்பட உள்ளது. இந்திய பயனர்களுக்காக, இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்த புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

No comments