Breaking News

ஒரு முறை 5 லட்சம் முதலீடு செய்தால் போதும்.. மாதம் 70,000 ரூபாய் சம்பாதிக்கலாம்.. அசத்தல் ஐடியா!

 


வீட்டிலிருந்தே தொழில் செய்ய வேண்டும் என்று விரும்புவர்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பை SBI பேங்க் வழங்குகிறது.
நம் நாட்டின் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா சொந்தமாக தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு SBI ஏடிஎம் ஃபிரான்சைஸை வழங்குகிறது. இந்த தொழிலை எடுத்து செய்யும் நபர்களுக்கு மாதம் 60,000 முதல் 70,000 வரை வருமானம் கிடைக்கும். இந்தப் பதிவில் இது குறித்த விவரங்களை விரிவாகப் பார்ப்போம்.ஏடிஎம்-களை நிறுவுவதற்கு என்று நிறுவனங்கள் இருக்கும். அதாவது வங்கிகள் பொதுவாக ஏடிஎம்-களை அமைப்பதில்லை.

ஏடிஎம்-களை அமைப்பதற்காகவே சில நிறுவனங்களுடன் வங்கிகள் ஒப்பந்தம் போட்டிருக்கும். இந்த நிறுவனங்கள் தான் பல்வேறு இடங்களில் ஏடிஎம்-களை அமைக்கும் பணியில் ஈடுபடுகிறது.இந்தியாவில் ஏடிஎம்களை நிறுவுவதற்கான ஒப்பந்தம் டாடா இண்டிகேஷ், முத்தூட் ஏடிஎம் மற்றும் இந்தியா ஒன் ஏடிஎம் ஆகிய நிறுவனங்கள் செய்கிறது. அத்தகைய சூழ்நிலையில், எஸ்பிஐ ஏடிஎம் உரிமையைப் பெற, நீங்கள் இந்த நிறுவனங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்பதை விரிவாகாப் பார்ப்போம். நீங்கள் அவர்களின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஏடிஎம் ஃபிரான்சைஸை பெற விண்ணப்பிக்கலாம்.ஏடிஎம் அமைப்பதற்கான முக்கிய விதிகள்: முதலில் ஏடிஎம் அமைக்க 50 முதல் 80 சதுர அடி இடம் இருக்க வேண்டும்.

மேலும் மற்ற ஏடிஎம்களில் இருந்து நீங்கள் ஏடிஎம் அமைக்க இருக்கும் இடம் 100 மீட்டர் தொலைவில் இருக்க வேண்டும். நீங்கள் தேர்ந்தெடுத்த இடம் மக்கள் எளிதில் பார்க்கும் வகையில் இருக்க வேண்டும்.24 மணி நேரமும் மின்சாரம் வழங்க வேண்டும். இந்த ஏடிஎம்களில் குறைந்தது ஒரு நாளைக்கு 300 பரிவர்த்தனைகளாவது நடக்க வேண்டும். ஏடிஎம் நிறுவ தடையில்லா சான்றிதழ் அவசியம்.ஏடிஎம் மையம் அமைப்பதற்கு எந்த இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்?:டாடா இண்டிகாஷ் - www.indicash.co.inமுத்தூட் ஏடிஎம் - www.muthootatm.com/suggest-atm.htmlஇந்தியா ஒன் ஏடிஎம் - india1atm.in/rent-your-spaceதேவைப்படும் ஆவணங்கள்: அடையாளச் சான்றுகளான ஆதார் கார்டு, பான் கார்டு, வாக்காளர் அட்டை, முகவரி சான்றுகளான ரேஷன் கார்டு, மின் கட்டணம் பில், பாஸ்புக், புகைப்படம், மெயில் ஐடி, மொபைல் நம்பர் போன்றவை தேவைப்படலாம்.எவ்வளவு வருமானம் கிடைக்கும்?: எஸ்பிஐ ஏடிஎம் உரிமையை வழங்கும் மிகப்பெரிய நிறுவனம் என்றால் அது டாடா இண்டிகேஷ் தான். இந்த நிறுவனம் ரூ.2 லட்சம் ரூபாயை செக்யூரிட்டி டெபாசிட்டில் ஏடிஎம் உரிமையை வழங்குகிறது.இந்த டெபாசிட் தொகையைத் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்.

இது தவிர ரூ.3 லட்சத்தை செயல்பாட்டு மூலதனமாக டெபாசிட் செய்ய வேண்டும். ஆக SBI பேங்க் ஏடிஎம் அமைக்க மொத்த முதலீடு ரூ.5 லட்சம் முதலீடு தேவைப்படும். எஸ்பிஐ ஏடிஎம் உரிமையைப் பெறுபவர் ஒவ்வொரு பணப் பரிவர்த்தனைக்கு 8 ரூபாயும், ஒவ்வொரு பணமில்லா பரிவர்த்தனைக்கு 2 ரூபாயும் பெறலாம்.வாடிக்கையாளர்களின் பேலன்ஸ் விவரங்களைச் சரிபார்த்தல், அறிக்கைகளைப் பெறுதல் போன்றவை பணமில்லா பரிவர்த்தனைகளின் கீழ் வருகின்றன என்பதை நினைவில் கொள்ளவும்.

No comments