Breaking News

செல்போன் வாடிக்கையாளர்களுக்கு மிகவும் முக்கியமான பதிவு ஆகும் .1 ரூபாய் ரீசார்ஜ் செய்தால் போதும்... புதிய பிளானை அறிமுகம் செய்த ஜியோ-

இந்திய டெலிகாம் நிறுவனங்களில் மிகவும் மலிவான விலையில் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் பிளானை அறிமுகம் செய்துள்ளது ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம். இதன் மூலம் நாட்டிலேயே குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டத்தை வழங்கும் நிறுவனமாக மாறியுள்ளது அந்நிறுவனம். 30 நாட்கள் வேலிடிட்டி கொண்ட இந்த ரீசார்ஜ் பிளானில் 100 MB மொபைல் டேட்டா கிடைக்கும் என தெரிவித்துள்ளது ஜியோ. இந்த பிளானின் விலை வெறும் 1 ரூபாய் மட்டுமே. ஜியோ வாடிக்கையாளர்கள் அந்த 100 MB டேட்டாவை பயன்படுத்திய பின்னர் அவர்களது இணைய இணைப்பின் வேகம் நொடிக்கு 65 கிலோபிட்டாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரீசார்ஜை ‘மை ஜியோ’ அப்ளிகேஷன் மூலமாக மட்டுமே மேற்கொள்ள முடியும். அந்த அப்ளிகேஷனில் ரீசார்ஜ் > வேல்யூ Other Plans டேபை தேர்வு செய்து வாடிக்கையாளர்கள் ரீசார்ஜ் செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 10 ரூபாய்க்கு 1 ஜிபி டேட்டா தரும் நிறுவனம் ஜியோ மட்டும்தான் எனவும் தெரிவித்துள்ளது. 

அண்மையில் தெரிவித்துள்ளது. 

அண்மையில் சக போட்டி டெலிகாம் நிறுவனங்களான ஏர்டெல் மற்றும் வோடாஃபோன் ஐடியா ப்ரீபெய்ட் ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தியதை தொடர்ந்து ஜியோ நிறுவனம் உயர்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

No comments