Breaking News

💥அரையாண்டு விடுமுறையில்லை அரசு பள்ளி ஆசிரியர்கள் ஏமாற்றம் - காலைக்கதிர்

அரையாண்டு விடுமுறை விடாததால், அரசு பள்ளி ஆசிரியர்கள் ஏமாற்றத்துக்குள்ளாயினர்.

தமிழகத்தில் கடந்த இரு ஆண்டுகளாக கொரோனா சூழல் காரணமாக பள்ளிகள் முழுமையாக செயல்படாமல் இருந்து வந்தது.

கடந்த செப்டம்பர் மாதம் முதல் சுழற்சி முறையில் படிப்படியாக அனைத்து வகுப்புகளும் துவங்கப்பட் டன. திங்கள் முதல், சனி வரை ஆறு நாட்களுக்கு பள்ளிகள் வேலைநாட்க ளாக செயல்பட்டு வருகின்றன.

ஜனவரி முதல் சுழற்சி முறை ரத்து செய்யப்பட்டு, அனைத்து வகுப்பு களும் செயல்படும் என அறிவிக்கப் பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் முதல், தொடர்ந்து வாரத்துக்கு ஆறு நாள் வீதம் பள்ளி செயல்பட்டு வரும் நிலையில், அரையாண்டு விடுமுறைக்கு ஆசிரி யர்கள் காத்திருந்தனர்.

வழக்கமாக கிறிஸ்துமஸ் மற்றும் புத் தாண்டு விடுமுறையுடன் இணைந்து, 10 நாள் வரை அரையாண்டு தேர்வு விடுப்பு வழங்கப்பட்டு வந்தது.

 நடப்பு கல்வியாண்டில், இதற்கு பதில், டிசம்பர், 20 முதல், 30 வரையில் திருப் புதல் தேர்வு நடத்த உத்தரவிடப்பட் டுள்ளது.

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு. சனிக்கிழமைகளில் வருவதால், அன்று மட்டும் விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இதனால் தொடர்ந்து நான்கு மாதம் வரை, வாரத்துக்கு ஆறு நாட்கள் என பணிபுரிந்து வரும் ஆசிரியர்கள், அரையாண்டு விடுமுறை வழங்காததால் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

2 comments:

  1. எதிர்பார்ப்பு ஏமாற்றத்தில் முடிந்தது.இந்த விடுமுறை காலத்தில் கோவிலுக்கு செல்வதும்,பாதயாத்திரை செல்வதும் வழக்கம் இச்சூழழில் அரசின் முடிவு ஏமாற்றத்தை தருகிறது

    ReplyDelete
  2. ஏமாற்றம் ஆசிரியர்களுக்கல்ல...மாணவர்களுக்கே....உளவியல் பூர்வமாக விடுப்பு என்பது புத்துணர்வைத்தரும்...மனச்சோர்வுடன் கூடிய
    கற்றல் ஒருபோதும் நடைப்பெறாது....

    ReplyDelete